தமிழரின் சுற்றுவட்டப்பாதையில் தந்தை பெரியார் - முனைவர் கருவூர் கன்னல் அவர்களின்நூலில் சில வைர வரிகள்:-
ஒரிசாவில்அண்மைக் காலம் வரை தென்னையைநடும் உரிமை பார்ப்பனர்களுக்கு மட்டுமேஇருந்து வந்தது. பார்ப்பனர் அல்லாதார்தென்னங்கன்றுகளை நட்டால் முளைக்காது என்றும், தோஷம் என்றும் கூறினர். இதைப்பார்ப்பனர் அல்லாதார் நம்பி வாழ்ந்தனர்.
பரசுராமர்கேரளத்தை கடலுக்குள் இருந்து எடுத்துவந்து பார்ப்பனர்களுக்குபரிசாக வழங்கினார் என்று கேரளப் பார்ப்பனர்கள்எழுதியும் பேசியும் வந்தனர். அதை கேரள மக்கள்நம்பி வாழ்ந்தனர்.
பக்கம்1
பார்ப்பனரின்எச்சிலைச் சூத்திரன் கையேந்தி வாங்க வேண்டும் என்னும்மனுதர்மச் சட்டம் இந்தியாவெங்கும் வழங்கிவந்தது.
பக்கம்2
பேருந்துஇயக்கமும், புகைவண்டி போக்குவரத்தும், அஞ்சல் அனுப்பும் நிலையமும் வெள்ளை அரசால் கொண்டுவரப்பட்டபோது பார்ப்பனர்கள் இவற்றைக் கடுமையாக எதிர்த்தனர் .
1861 இல் ஆங்கிலக்கல்வி அமலுக்கு வந்த போது தான் பார்ப்பனர்களை எல்லாவித தண்டனைகளில் இருந்தும் விதிவிலக்கு அளித்து எழுதப்பட்டிருந்த ஸ்மிருதிகள் விலைபோகாத பழைய குப்பைகளாய் குவிந்தன . நால்வருண ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது .
பக்கம் 3
பெரியார் நகரசபை தலைவராக பொறுப்பேற்க மாவட்ட ஆட்சியர் அனுமதி ஆணை வழங்க வேண்டும் .
பக்கம் 4
பார்ப்பனரல்லாத மாணவர்கள் கல்வி கற்றிடப் பெரியார் சொந்த நிதியாக 10,000 ரூபாய் கொடுத்தார் .
பக்கம் 6
காந்தி பெரியார் வீட்டில் தங்கினார் .
பக்கம் 8
1920 இல் நெல்லை காங்கிரஸ் மாநாட்டில் பெரியார் வகுப்புவாரி பிரதிநிதித்துவ தீர்மானம் கொண்டு வந்தார் .
பக்கம் 9
1932 இல் சுயமரியாதை இயக்க மாநாடு ஈரோட்டில் அனைத்து வங்கிகளும் அரசுடமை ஆக்க வேண்டும் எனத் தீர்மானம் போட்டது .
பக்கம் 15
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி தமிழ்நாட்டில் முதல் பெண் மருத்துவர் . சென்னை மாகாண சபையின் முதல் பெண் உறுப்பினர் இவர் . இந்திய வரலாற்றில் பெண்களுக்கு வாக்குரிமை வாங்கித்தந்த முதல் மாநிலம் சென்னை .
பக்கம் 21
1946 இல் கரூருக்கு அருகில் காவிரிக்கரையில் தவிட்டுப்பாளையம் எனும் ஊரில் முதன்முதலில் திராவிடர் கழகக் கொடி ஏற்றப்பட்டது .
பக்கம் 25
பார்ப்பனர் தங்களைப் பிராமணர் என அழைத்துக் கொள்கிறார்கள் . பிராமணர் என்றால் பிர்மாவின் தலையில் தோன்றியவர்கள் என நாம் ஒப்புக்கொள்ள வேண்டும் . நாம் பிராமணர் என அழைத்தால் , பிர்மா எனும் கடவுள் இருக்கிறார் என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும் . எனவேதான் நாம் பார்ப்பனர் என அழைக்கிறோம் .
பக்கம் 58
இராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது அவர் அலுவலகத்தில் பணிபுரிந்த 4000 பேரும் பார்ப்பனர்களாக இருந்தனர் .
பக்கம் 63
இன்று மோடி அலுவலகத்தில் 10 பிற்படுத்தப்பட்டவர்களைத் தவிர அனைவரும் பார்ப்பனர்களே !
பக்கம் 63
இந்தியாவிலேயே மே தின விழாவை கொண்டாடிய முதல் இயக்கம் சுயமரியாதை இயக்கமே !
என் காலில் செருப்பு போட அனுமதிக்காத உயர்ஜாதிக்காரர்களுக்கு மத்தியில் நான் செருப்புப் போட்டு நடக்க வேண்டும் . என் தோளில் துண்டு போட்டு செல்ல அனுமதிக்காத உயர்ஜாதி மக்களைப் போல் நானும் துண்டு போட்டு வெளியே செல்ல வேண்டும் எனும் என் ஆசையை பெரியார்தானே நிறைவு செய்தார் . மீசை வைத்துக் கொள்ளவும் கிருதா வைத்துக்கொள்ளவும் அனுமதிக்காத உயர்ஜாதி மக்களிடையே பெரியார் தானே நீயும் அவர்களை போல மீசை , கிருதா வைத்துக்கொள் எனப் போராடி அந்த உரிமையை எனக்கு வாங்கித் தந்தார் . பொதுப்பாதையில் நானும் என் ஜாதியை சேர்ந்தவர்களும் நடக்கக்கூடாது எனத் தடை விதித்திருந்த உயர் ஜாதி மக்களை எதிர்த்துப் போராடி நானும் எங்கள் ஜாதியாரும் நடக்க உரிமை வாங்கித் தந்தது பெரியார் இயக்கம் தானே ! மற்றவர்களை போல நானும் உணவகத்துக்கு செல்ல வேண்டும் . அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகிவிட வேண்டும் .
பக்கம் 87
" தமிழ்நாடு தமிழருக்கே "
பக்கம் 90
பெரியார் சுற்றிய தொலைவை கிரேக்க மாமன்னன் அலெக்சாண்டரும் சுற்றி இருக்க முடியாது . தொமத தனுசு , சாக்ரடீசு பெரியார் போலப் பேசிட வில்லை . படிக்க வேண்டிய அரிய நூல்
பக்கம் 93
Be the first to rate this book.