தமிழர் காலம் என்பது அறிவியல் அடிப்படையில் அறிவு, சிந்தனை, உணர்வு, பண்பாடு, கலை, இசை, செயல்- போன்ற அனைத்தையும் தன்னகத்தே கொண்டு உயிருக்கு ஒழுங்கு செய்யும் ஒரு மாபெரும் மரபை கொண்டிருக்கிறது என்ற உண்மையை வெளிப்படுத்தும் ஒரு அரும் பெரு முயற்சி தமிழர் கால எரண மெய்யறிவு நூலாகும்.
1. புறக்காலத்தியல் (The Science of Physical Time)
2. அகக்காலத்தியல் (The Science of Psychological Time)
என்று இரண்டு தொகுதிகளாக (Volumes) பிரிக்கப்பட்டு , மொத்தம் 56 தமிழ் அறிவியல் ஆய்வு இயல்களாக 950 பக்கங்களில் உருவாக்கம் பெற்றுள்ள இந்நூல் தமிழர் ஆழ்அறிவியல் வீழ்ச்சியின் மீட்பாகத் திகழ்கின்றது.
தமிழர் கால எரண மெய்யறிவு எனும் இந்நூல் தமிழர்கள் வகுத்த புறக்கால அகக்கால வரையறைகளை விளக்கி, தமிழர் வானோரை உடுகணியம், ஓராண்டு கணியம், திங்கள் /மாதக் கணியம், 60 அறுபான்மான கணியம், வார அல்லது கிழமை கணியம், நாள் கணியம் என்று தமிழர் அறிவியலை முறையே விரிக்கும் தமிழ் அறிவியல் உத்தியில் எழுத்தப்பட்ட நூலாகும்.
தற்கால தமிழர்களிடையே உள்ள கால அறிவியல் பெருங் குழப்பத்திற்கு, அறிவியல் சான்றுகளுடன், மறுக்க இயலா தமிழ்ச் சங்க இலக்கிய உறுதிப்பாடுகளோடு விடைகாணப்பட்ட ஓர் அறிவியல் ஆய்வு நூலாக இது விளங்குகின்றது.
Be the first to rate this book.