இந்த நூல் காலனிய காலத்தில் தமிழ்வழிப் பள்ளிகள் இயங்குவதில் படிப்படியாக தேக்கம் ஏற்பட்டு எவ்வாறு வீழ்ச்சியடையத் தொடங்கின என்பது பற்றியும், தமிழக ஆட்சியாளர்கள் கல்விக்கு ஊக்கமளிக்கவும் ஆதரவளிக்கவும் தவறினது பற்றியும் விரிவாக எடுத்துக்கூறுகிறது. பாரம்பரிய திண்ணைப் பள்ளிக்கூடங்களில் சொல்லிக் கொடுக்கப்பட்ட கணிதம், தமிழ், பேச்சுப் பயிற்சி. வானியல். மருத்துவம் ஆகிய பாடங்களில் எல்லாம் சிறுவர்களின் எதிர்கால வாய்ப்பிற்கான நேரடியான தொடர்பு எதுவும் இல்லை என்றும், சமூகத்தில் கல்வியின்மை அதிகமாகக் காணப்பட்டது என்றும், அக்காலத்திய மக்கள்தொகையில் படித்தவர்களின் சதவிகிதம் மிகவும் குறைவாகவே இருந்தது பற்றியும் விரிவாக அலசுகிறது. கத்தோலிக்க மற்றும் லூத்தரன் மதப்பரப்பினர் பல்வேறு இடங்களில் மதம் மாறியவர்களுக்காக தமிழ்மொழி ஆரம்பப் பள்ளிகளை ஆரம்பித்தது. பல்வேறு சாதியினர் இடையே கல்வி பரவியது. பெண்பிள்ளைகளின் பள்ளிக் கல்வி, தமிழில் பாடநூல்கள் அச்சிடப்பட்டது. மேற்கத்திய முறைப்படி பல்வேறு பாடங்கள் அறிமுகப்படுத்தியது பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன. போர்ச்சுக்கீசிய ஆங்கில, பிரெஞ்சு மொழிவழிப் பள்ளிகள். கல்லூரிகள் ஆரம்பித்தது. சட்டம், மருத்துவம், தொழில்நுட்பம், கலை மற்றும் அறிவியல் கல்வி பரவியது விளக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் நிறுவப்பட்ட பள்ளிகளில் மாணவர்களின் திறனை சோதிக்க முறைப்படியான தேர்வுகள். மதிப்பீடுகள். தகுதியானவர்களுக்கு சான்றிதழ் வழங்குதல் ஆகியன எவ்வாறு நிகழ்ந்தன என்று தெளிவாக வெளிச்சமிட்டுக் காட்டப்பட்டுள்ளன. ஐரோப்பியரின் வருகையால் தமிழகத்தில் காலனிய காலக் கல்வி கட்டமைக்கப்பட்டது விவரிக்கப்பட்டுள்ளது.
முன் அட்டைப்படம்: சென்னையில் பிராமணர்-அல்லாதார் திண்ணைப் பள்ளிக்கூடம், 1834 (பிரித்தானிய நூலகம், இலண்டன், OIOC: P 354)
Be the first to rate this book.