உலகின் மிக தொன்மையா மொழி நம் தாய் மொழிதமிழ்;பண்டை நாகரிகங்களுள் தலை சிறந்தது நம் தமிழ் நாகரிகம். ஆனால் நம் தமிழின் தொன்மையையும் நம் கலை, இலக்கியம், நாகரிகம், பண்பாட்டு வரலாறு என்று பல வற்றின் பெருமைகளையும் வந்தேறி ஆரியமும் அதன் பின்தோற்றல்களும் சீர்;குலைத்து வந்துள்ளன என்பதை நாம் அறிவோம். இனப்பகைளும் அவற்றின் அடிவருடிகளும் காலம் காலமாக நம் மொழிமீதும், நம் இன வரலாற்றின் மீதும் பிறகூறுகளின் மீதும் வாய்ப்பு நேரும் போது மட்டுமின்றி வாய்ப்பை வலிய வரவழைத்தும், அரசியல் சாய்கால் பெற்றும், வெளிப்படையாகவும் கரவாகவும் தொடுத்து வரும் தாக்குதல்கள் அளவிறந்தன. குமரி முனைக்குத் தெற்கே சிலநூறு கற்கள் நிலப்பகுதி இருந்து பின், இற்றைக்கு ஏறத்தாழ பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் உலகெங்கும் கடல்மட்டம் உயர்ந்த பொழுது கடலுள் மூழ்கியிருக்கலாம் என்று இன்றைய அறிவியல் ஏற்றுக்கொண்ட ஆய்வு முடிவைப் புறந்தள்ளி 'கடல் கொண்டதென்னாடு' பற்றி எழுதிய தமிழறிஞசர்கள்அனைவரையும் தாக்கி ஏளனம் செய்து நூல் வந்துள்ளது. சிந்துவெளி நாகரிகம் தமிழ் நாகரிகமே என்ற உண்மையை மறைத்து ஆரிய நாகரிகமே என்று பொய்யாகப் புனைந்து நிலைநாட்டும் முயற்சி ஓர் ஐந்து ஆண்டுகளுக்கு முன்புகூட நடந்தது.
இத்தகைய அறக்கேடுகளை எதிர்த்து உண்மையை மீட்டெடுக்கும் முயற்சிகள் பேரளவில் நடைப்பெறவேண்டியிருப்பினும் சிறிய அளவிலேனும் நடந்து வருவது ஓரளவு ஆறுதலளிப்பதாகும். இயற்கைச் சீற்றத்தால் அழிந்ததைவிட இனப்பகைகளாலும் அதன் பாதம் தாங்கிகளாலும் திட்டமிட்டு அழிக்கப்பட்ட தமிழிலக்கியங்கள் ஏராளமாகும். கிடைத்துள்ள ஓரளவு இலக்கியங்களும் தொல்லியல் ஆய்வுகளும் கல்வெட்டுகளும் செப்பேடுகளும் பிறநாட்டு நல்லறிஞர் ஆய்வுகளும் தமிழின் பெருமையையும் தமிழ் நாகரிகத்தின் சிறப்பையும் நன்கு வெளிப்படுத்தின.இச்சான்றுகள் இன்னும் வெளிவந்துக்கொண்டிருக்கின்றன. காட்டாக சில திங்கள்களுக்கு முன்மயிலாடுதுறையில் கிடைத்துள்ள, தமிழ் எழுத்துப் பொறிக்கப்பட்ட கற்கோடரியைச் சுட்டலாம்;. கடல் கொண்ட குமரி மாமல்லை, புகார் என்று பல அகழ்வாய்வுகளும் முழுஅளவில் நடத்தப்படுமானால் உலகம் போற்றும் உண்மைகள் வெளிவரும். கன்னட நாட்டின் எருமையூரில் (மைசூரில்) பல தமிழர்கள் பல்லாண்டுகள் உசாவலின்றி சிறைக் கொட்டிலில் கிடக்கின்றன. அவ்வாரே ஏராளமான தமிழ் கல்வெட்டுகள் அவ்வூரிலுள்ள மைய அரசின் கல்வெட்டுத்துறை அலுவலகத்தில் அச்சிடப்படாமல் முடக்கப்பட்டுக்கிடக்கின்றன. அவை முழுவதும் வெளியிடப்படும் பொழுது நம் சான்றுகள் கூடும்.
கிடைத்துள்ள சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு 'குமரிக் கண்டக் கோட்பாடு ' அறிஞர்களிடையே எழுந்தது. தமிழில் நாவலர் சோமசுந்தர பாரதியார், மயிலை சீனி வேங்கட சாமி, பன்மொழிப்புலவர் அப்பாதுறையார் முதலிய அறிஞர்கள் இது பற்றிய ஆய்வு நூல் படைத்தனர். மொழிஞாயிறு பாவாணர் தமிழே ஞால முதன் மொழி தமிழே உலக மொழிகளுக்குத்தாய் ஆரியத்திற்கு மூலம் மாந்தன் பிறந்தகம் குமரிக்கண்டமே என்று முப்பெரும் கோட்பாட்டை விளக்கிப் போந்தார்.
குமரிக் கண்டத்தில் பிறந்த சிறந்த தமிழ் நாகரிகம் தெற்கில்லிருந்து வடக்காகப் பரவி, சிந்து சமவெளிப்பகுதிக்கும் உலகின் பிற பகுதிகளுக்கும் பரவிய செய்திகள், கோண்டுவானா , இலெமூரியா, குமரிக்கண்ட கடல்கோள், மூன்று தமிழ்க் கழங்கள் என்று பல செய்திகள் நம் கண்ணுக்குள்ளும் செவிக்குள்ளும் புகுந்து மூளைக்குள் பதிவாகி உட்கார்ந்து கொண்டுள்ளன. இவற்றுக்கு ஆதரவான ஆய்வு நூல்கள் மட்டுமன்றி எதிர்ப்பாக வரும் நூல்களையும் பார்கிறோம்.
இந்த நிலையில் சோவியத்து அலெக்சாந்தர் காந்திரதாவ் எழுதியுள்ள 'முப்பெருங் கடற் புதிர்கள் (The Riddles of the three Oceans: 1974) என்ற ஆய்வு நூல் நம் கவனத்திற்கு உரியதாகும். அது பசுபிக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல், ஆகியவற்றைச் சார்ந்த நாடுகளின் பண்டைய நாகரிகங்களின் தேற்றம் அவற்றுக்கிடையே இருந்த தொடர்புகள் பற்றியதாகும். அந்நூலின் இரண்டாம் பகுதி இந்தியப் பெருங்கடல் என்று இன்று குறிப்பிடப்பெறும் தென்பெருங்கடல் பற்றியதாகும். அப்பகுதியின் தமிழாக்கமே உங்கள் கையில் தவழும் இந்நூல் இப்பகுதி தமிழ் நாகரிகம் சிந்துவெளிநாகரிகம் பற்றி பல அரிய செய்திகள் கொண்டது. இலெமூரியாக் கோட் பாட்டியின் வன்மை - மென்மைகளையும் அது ஆய்வு செய்கின்றது. தென்னாட்டு கடல் கொண்ட செய்திகள்,சிந்துவெளி நாகரிகமும் அந்நாகரிகத்தின் முத்திரை எழுத்துகளும் தமிழர் (திராவிடர்) படைப்பே என்பதை நிறுவுவதற்கான வலுவான சான்றுகள், முதலியவற்றை இந்நூலின் ஆசிரியர் காட்டியுள்ளார்
இவ்வறிஞர் ஆசியவியலாளர் பண்டை நாகரிகங்களின் எழுத்துக்களை படித்தறியும் முயற்சிகளில் ஈடுப்பட்டவர்;, அறிவியல் செய்திகளை பொது மக்களுக்கு புரியும் வகையில் எழுதியவர். சிந்துவெளி நாகரிக முத்திரை எழுத்துக்களை தமிழ் (திராவிடம்) எனக் கண்டுணர்ந்த சோவியத் அறிஞர் குழுவினருள் ஒருவர். 17 நூல்களையும் நூற்றுக்கணக்கான கட்டுரைகளையும் படைத்தவர். 3
அவருடைய உருசிய மொழி மூலப்படைப்பின் ஆங்கிலப் பெயர்ப்பு நூலை மிக சிறப்பாக தமிழாக்கம் செய்து தந்துள்ளார் நம் அறிஞர் பி . இராமநாதன். தனி வெளியீடாகவே வரும் அளவுக்கு விளக்கமான மிக நீண்ட முன்னுரைகளையும் எழுதியுள்ளார். அது ஒரு தனி ஆய்வாக விளக்கித் தோன்றுகின்றது. ஏற்கெனவே அவர் (A new account of the History and culture of the Tamils, 1998) சிந்துவெளி தொல்தமிழ் நாகரிகம், 1999 ஆகிய நூல்களை வெளியிட்டுள்ளார். இந்தோ-ஐரோப்பியம் உட்பட பள்வேறு மொழிக்குடுப்பங்களுக்குச் சென்றுள்ளனவும்,தமிழின் தலைமையை நிலைநாட்டுவனவுமான, 22102 சொற்களைப் பற்றி மொழிஞாயிறு தேவநேய பாவாணர் அவர்கள் 1977-81 இல் வெளியிட்ட கட்டுரைகளைத் தொகுத்து தலைமைத் தழிழ்என்ற பெயரில் பாவாணர் நூல் தொகுப்பில் ஒன்றாகத் தமிழ்மண் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. அக்கட்டுரைகளின் ஆங்கில மொழிப்பெயர்ப்பை விரிவான முன்னுரையுடன் Nostratics: the Light from Tamil - According to Devaneyan என்ற பெயரில் 2004இல் பி. இராமநாகன் வெளியிட்டுள்ளார்). அவருடைய அரிய முயற்சிகளையும் தளரத் தயங்காக் கடமையுணர்வையும் போற்றி நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.
தமிழரின் நாடிநரம்புகளின் தமிழுணர்வைக் கொப்பளிக்க வைத்தவர் நம் பாவலரேறு பெருஞ்சித்திரத்திரனார் இவர்கள். அவர்தம் புதல்வர் மா.பூங்குன்றன் அவர்கள் தமிழியத் துறைகளில் தடஉலகின் மிக தொன்மையா மொழி நம் தாய் மொழிதமிழ்;பண்டை நாகரிகங்களுள் தலை சிறந்தது நம் தமிழ் நாகரிகம். ஆனால் நம் தமிழின் தொன்மையையும் நம் கலை, இலக்கியம், நாகரிகம், பண்பாட்டு வரலாறு என்று பல வற்றின் பெருமைகளையும் வந்தேறி ஆரியமும் அதன் பின்தோற்றல்களும் சீர்;குலைத்து வந்துள்ளன என்பதை நாம் அறிவோம். இனப்பகைளும் அவற்றின் அடிவருடிகளும் காலம் காலமாக நம் மொழிமீதும், நம் இன வரலாற்றின் மீதும் பிறகூறுகளின் மீதும் வாய்ப்பு நேரும் போது மட்டுமின்றி வாய்ப்பை வலிய வரவழைத்தும், அரசியல் சாய்கால் பெற்றும், வெளிப்படையாகவும் கரவாகவும் தொடுத்து வரும் தாக்குதல்கள் அளவிறந்தன. குமரி முனைக்குத் தெற்கே சிலநூறு கற்கள் நிலப்பகுதி இருந்து பின், இற்றைக்கு ஏறத்தாழ பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் உலகெங்கும் கடல்மட்டம் உயர்ந்த பொழுது கடலுள் மூழ்கியிருக்கலாம் என்று இன்றைய அறிவியல் ஏற்றுக்கொண்ட ஆய்வு முடிவைப் புறந்தள்ளி 'கடல் கொண்டதென்னாடு' பற்றி எழுதிய தமிழறிஞசர்கள்அனைவரையும் தாக்கி ஏளனம் செய்து நூல் வந்துள்ளது. சிந்துவெளி நாகரிகம் தமிழ் நாகரிகமே என்ற உண்மையை மறைத்து ஆரிய நாகரிகமே என்று பொய்யாகப் புனைந்து நிலைநாட்டும் முயற்சி ஓர் ஐந்து ஆண்டுகளுக்கு முன்புகூட நடந்தது.
இத்தகைய அறக்கேடுகளை எதிர்த்து உண்மையை மீட்டெடுக்கும் முயற்சிகள் பேரளவில் நடைப்பெறவேண்டியிருப்பினும் சிறிய அளவிலேனும் நடந்து வருவது ஓரளவு ஆறுதலளிப்பதாகும். இயற்கைச் சீற்றத்தால் அழிந்ததைவிட இனப்பகைகளாலும் அதன் பாதம் தாங்கிகளாலும் திட்டமிட்டு அழிக்கப்பட்ட தமிழிலக்கியங்கள் ஏராளமாகும். கிடைத்துள்ள ஓரளவு இலக்கியங்களும் தொல்லியல் ஆய்வுகளும் கல்வெட்டுகளும் செப்பேடுகளும் பிறநாட்டு நல்லறிஞர் ஆய்வுகளும் தமிழின் பெருமையையும் தமிழ் நாகரிகத்தின் சிறப்பையும் நன்கு வெளிப்படுத்தின.இச்சான்றுகள் இன்னும் வெளிவந்துக்கொண்டிருக்கின்றன. காட்டாக சில திங்கள்களுக்கு முன்மயிலாடுதுறையில் கிடைத்துள்ள, தமிழ் எழுத்துப் பொறிக்கப்பட்ட கற்கோடரியைச் சுட்டலாம்;. கடல் கொண்ட குமரி மாமல்லை, புகார் என்று பல அகழ்வாய்வுகளும் முழுஅளவில் நடத்தப்படுமானால் உலகம் போற்றும் உண்மைகள் வெளிவரும். கன்னட நாட்டின் எருமையூரில் (மைசூரில்) பல தமிழர்கள் பல்லாண்டுகள் உசாவலின்றி சிறைக் கொட்டிலில் கிடக்கின்றன. அவ்வாரே ஏராளமான தமிழ் கல்வெட்டுகள் அவ்வூரிலுள்ள மைய அரசின் கல்வெட்டுத்துறை அலுவலகத்தில் அச்சிடப்படாமல் முடக்கப்பட்டுக்கிடக்கின்றன. அவை முழுவதும் வெளியிடப்படும் பொழுது நம் சான்றுகள் கூடும்.
கிடைத்துள்ள சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு 'குமரிக் கண்டக் கோட்பாடு ' அறிஞர்களிடையே எழுந்தது. தமிழில் நாவலர் சோமசுந்தர பாரதியார், மயிலை சீனி வேங்கட சாமி, பன்மொழிப்புலவர் அப்பாதுறையார் முதலிய அறிஞர்கள் இது பற்றிய ஆய்வு நூல் படைத்தனர். மொழிஞாயிறு பாவாணர் தமிழே ஞால முதன் மொழி தமிழே உலக மொழிகளுக்குத்தாய் ஆரியத்திற்கு மூலம் மாந்தன் பிறந்தகம் குமரிக்கண்டமே என்று முப்பெரும் கோட்பாட்டை விளக்கிப் போந்தார்.
குமரிக் கண்டத்தில் பிறந்த சிறந்த தமிழ் நாகரிகம் தெற்கில்லிருந்து வடக்காகப் பரவி, சிந்து சமவெளிப்பகுதிக்கும் உலகின் பிற பகுதிகளுக்கும் பரவிய செய்திகள், கோண்டுவானா , இலெமூரியா, குமரிக்கண்ட கடல்கோள், மூன்று தமிழ்க் கழங்கள் என்று பல செய்திகள் நம் கண்ணுக்குள்ளும் செவிக்குள்ளும் புகுந்து மூளைக்குள் பதிவாகி உட்கார்ந்து கொண்டுள்ளன. இவற்றுக்கு ஆதரவான ஆய்வு நூல்கள் மட்டுமன்றி எதிர்ப்பாக வரும் நூல்களையும் பார்கிறோம்.
இந்த நிலையில் சோவியத்து அலெக்சாந்தர் காந்திரதாவ் எழுதியுள்ள 'முப்பெருங் கடற் புதிர்கள் (The Riddles of the three Oceans: 1974) என்ற ஆய்வு நூல் நம் கவனத்திற்கு உரியதாகும். அது பசுபிக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல், ஆகியவற்றைச் சார்ந்த நாடுகளின் பண்டைய நாகரிகங்களின் தேற்றம் அவற்றுக்கிடையே இருந்த தொடர்புகள் பற்றியதாகும். அந்நூலின் இரண்டாம் பகுதி இந்தியப் பெருங்கடல் என்று இன்று குறிப்பிடப்பெறும் தென்பெருங்கடல் பற்றியதாகும். அப்பகுதியின் தமிழாக்கமே உங்கள் கையில் தவழும் இந்நூல் இப்பகுதி தமிழ் நாகரிகம் சிந்துவெளிநாகரிகம் பற்றி பல அரிய செய்திகள் கொண்டது. இலெமூரியாக் கோட் பாட்டியின் வன்மை - மென்மைகளையும் அது ஆய்வு செய்கின்றது. தென்னாட்டு கடல் கொண்ட செய்திகள்,சிந்துவெளி நாகரிகமும் அந்நாகரிகத்தின் முத்திரை எழுத்துகளும் தமிழர் (திராவிடர்) படைப்பே என்பதை நிறுவுவதற்கான வலுவான சான்றுகள், முதலியவற்றை இந்நூலின் ஆசிரியர் காட்டியுள்ளார்
இவ்வறிஞர் ஆசியவியலாளர் பண்டை நாகரிகங்களின் எழுத்துக்களை படித்தறியும் முயற்சிகளில் ஈடுப்பட்டவர்;, அறிவியல் செய்திகளை பொது மக்களுக்கு புரியும் வகையில் எழுதியவர். சிந்துவெளி நாகரிக முத்திரை எழுத்துக்களை தமிழ் (திராவிடம்) எனக் கண்டுணர்ந்த சோவியத் அறிஞர் குழுவினருள் ஒருவர். 17 நூல்களையும் நூற்றுக்கணக்கான கட்டுரைகளையும் படைத்தவர். 3
அவருடைய உருசிய மொழி மூலப்படைப்பின் ஆங்கிலப் பெயர்ப்பு நூலை மிக சிறப்பாக தமிழாக்கம் செய்து தந்துள்ளார் நம் அறிஞர் பி . இராமநாதன். தனி வெளியீடாகவே வரும் அளவுக்கு விளக்கமான மிக நீண்ட முன்னுரைகளையும் எழுதியுள்ளார். அது ஒரு தனி ஆய்வாக விளக்கித் தோன்றுகின்றது. ஏற்கெனவே அவர் (A new account of the History and culture of the Tamils, 1998) சிந்துவெளி தொல்தமிழ் நாகரிகம், 1999 ஆகிய நூல்களை வெளியிட்டுள்ளார். இந்தோ-ஐரோப்பியம் உட்பட பல்வேறு மொழிக்குடுப்பங்களுக்குச் சென்றுள்ளனவும்,தமிழின் தலைமையை நிலைநாட்டுவனவுமான, 22102 சொற்களைப் பற்றி மொழிஞாயிறு தேவநேய பாவாணர் அவர்கள் 1977-81 இல் வெளியிட்ட கட்டுரைகளைத் தொகுத்து தலைமைத் தழிழ் என்ற பெயரில் பாவாணர் நூல் தொகுப்பில் ஒன்றாகத் தமிழ்மண் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. அக்கட்டுரைகளின் ஆங்கில மொழிப்பெயர்ப்பை விரிவான முன்னுரையுடன் Nostratics: the Light from Tamil - According to Devaneyan என்ற பெயரில் 2004இல் பி. இராமநாதன் வெளியிட்டுள்ளார்). அவருடைய அரிய முயற்சிகளையும் தளரத் தயங்காக் கடமையுணர்வையும் போற்றி நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.
Be the first to rate this book.