• பொருள் உணர்வோடும் வட்டார வழக்கு ஒப்பீட்டோடும் உருவாக்கப்பட்ட முதல் வேளாண் கலைச்சொல் அகராதி
• 4133 தலைச்சொற்கள்
• 95 தலைச்சொல்லிற்கான படங்கள்
• அகராதியியல், மொழியியல் கோட்பாட்டின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.
மண்வெட்டி manvetti பெ. (மண்ணை வெட்டுவதற்குப் பயன்படும் வகையில்) காம்பு மரத்தாலும் வெட்டும் பகுதி இரும்புத் தகட்டாலும் செய்த ஒரு வேளாண் கருவி. (புது.), (சிவ.). மம்டி mamti (திருவ.), (வே.), (நீ.), (திருநெல்.) மம்பட்டி mampatti (தே.), (திருநெல்.), (நீ.), (புது.), (தஞ்.). (பார்க்க - கொளச்சி மம்முட்டி). (தூ.), (சிவ.), (விரு.). மம்புட்டி mamputti (தஞ்.), (திருச்.), (திருநெல்.). மம்முட்டி mammutti (பெ.). சனுக்க/சனிக்கி canukkalcanikki(தரு.). நம்பட்டி nampatti (ராம.). மமட்டி mamatti (புது.), (நா.). கைகொட்டு kaikottu (கட.). மமுட்டி mamutti (தே.), (வே.), (நாக.), (நா.), (கட.), (தஞ்.). கொத்து kottu (கட.). வம்பட்டி vampatti (தூ.), (புது.)
Be the first to rate this book.