தமிழ்மொழியின் வளர்ச்சிக்குப் பெரிதும் பாடுபட்ட, பாடுபடும் தமிழ்ச் சான்றோர்கள் எண்ணிலடங்கார். அவர்களுள் குறிப்பிடத்தக்க எண்மரைப் பற்றி உயர்திரு த.இராமநாதன்அவர்கள் தமிழ் நல்லறிஞர்கள் என்னும் ஒரு தண்ணிறந்த நூலைப் படைத்துள்ளார். இளமையில் திண்ணைப் பள்ளியில் சேர்ந்து கல்வி கற்று, தனித்தமிழ்ப் பற்றால் அறிஞர்கள் நாடித்தன் புலமையை வளர்த்துக்கொண்டு இலக்கிய இலக்கணத் தேர்ச்சி பெற்றுக் கல்லூரிப்பேராசிரியராகவும் பணியாற்றிப் புகழ் பெற்ற சாமிநாதையர் ஏட்டளவில் இருந்த இலக்கியங்களை அரும்பாடுபட்டு அலைந்து தேடிப் பெற்ற அவற்றை அச்சேற்றி நூல்களாகப் பதிப்பித்து , தமிழ்ன்னைக்கு அருந்தொண்டாற்றியமையாலன்றோ தமிழக அரசு. தந்தை கற்பித்த அடிப்படைக் கல்வியால் பதின்மூன்று வயதில் பாரதி பட்டம் பெற்றவர், பல மொழிப்புலமையும் எழுத்தாற்றலும் மிக. பத்திரிகை ஆசிரியர் பணி ஏற்றவர். சுதந்திர வேட்கை தூண்டும் பேச்சாளர், சமுதாயக் கொடுமைகளை எதிர்த்துப் போராடியவரை தேசிய கவி, என்று போற்றுதல் முற்றிலும் பொருத்தும் என்பதை ஆசிரியர் நிலைநாட்டியுள்ளார்.
Be the first to rate this book.