1921 1939 காலகட்டத்தில் வ. வே. சு. ஐயர், அ. மாதவையா, றாலி, பி.எஸ். ராமையா, கல்கி, எம்.எஸ். கல்யாணசுந்தரம், ந. பிச்சமூர்த்தி, கு.ப. ராஜகோபாலன், சி.சு. செல்லப்பா, சங்கு ஸுப்ரமண்யன், புதுமைப்பித்தன், பெ.கோ. சுந்தரராஜன், ந. சிதம்பர சுப்ரமண்யன், தி. ஜ. ரா., மௌனி, லா.ச. ராமாமிர்தம் ஆகிய கதாசிரியர்கள் எழுதிய புதுமையான உருவ உள்ளடக்கங்களைக் கொண்ட சிறுகதைகளைக் காலவரிசைப்படி எடுத்துக்கொண்டு, சிறுகதை வளர்ச்சியில் அவற்றின் பங்களிப்பு என்ன, நிறைகுறைகள் என்ன என்பவற்றை விரிவாக ஆராய்கிறது ‘தமிழ்ச் சிறுகதை பிறக்கிறது.’ இலக்கிய வாசகர்கள், மாணவர்களுக்கு மிகவும் பயனுடைய விமர்சன நூல்.
Be the first to rate this book.