பிடாரி வழிபாடு சமூக வரலாறுகள் நிறைந்தது. இம்மரபில் அறியப்படாத சாதிய முரண்கள் பல பின்னப்பட்டுள்ளன. இவை யாவற்றையும் இந்த நூல் வெளிச்சமிட்டு விவாதிக்கிறது. தெய்வங்கள், பூசாரிகள் ஆகியோரின் சமய அரசியல் கதையாடல்கள் இதில் மீட்டுருவாக்கம் பெறுகின்றன. இந்த நூலின் ஆசிரியர் முனைவர் மு.செல்வக்குமார் காத்திரமானதொரு பண்பாட்டாய்வை முன்னெடுத்திருக்கிறார். அவர் கண்டுள்ள புரிதல்களும் கோணங்களும் கவனத்திற்குரியன. இது ஓர் ஒப்புமை இனவரைவியல். இம்முயல்வு மெச்சத்தக்கது.
நூலாசிரியரின் நுண்ணிய பார்வை, பன்முக நோக்கு. அகவய முறையியல், மாற்று எடுத்துரைப்பு முதலானவை அனைத்தும் நம் வசப்படுகின்றன. தமிழ்ச் சமூக வரலாற்றியலில் இது முற்றிலும் புதிய வழித்தடம். பண்பாட்டு அரசியல் பேசுவோர் அவசியம் வாசிக்க வேண்டிய நூலிது.
* முனைவர் பக்தவத்சல பாரதி
Be the first to rate this book.