திருமணத்திற்குப் பிறகு துபாய் மண் என்னைத் தத்தெடுத்துக் கொண்டதால். என் தமிழ் ஆர்வத்தைத் தூசி தட்டி எழுப்ப வேண்டியதாகப் போய்விட்டது. வெளிநாட்டு வாழ்வில் என் தனிமைத் துயரைப் போக்குவதற்காக, அருகில் ஒரு தோழியுடன் பகடியாக உரையாடுவதைப் போல கற்பனை செய்து எழுத ஆரம்பித்தேன். துபாய் என்றவுடன் சட்டென்று நினைவு வரும் நடிகர் வடிவேலுவும் கைகொடுக்க, 'ஹலோ துபாயா?' என்று நக்கலாக அழைத்ததில் ஆரம்பித்து, 'சொர்க்கமே என்றாலும்... அடதுபாயே ஆனாலும் அது நம்மூரைப் போல வருமா' என்ற சென்டிமெண்டல் காட்சிகளும் கலந்த இந்த நூல். உங்களுக்கு ஒரு ஃபீல் குட் அனுபவத்தைத் தரும் என்று நம்புகிறேன். துபாயைப் பற்றிய பொதுவான மதிப்பீடுகளை தமிழகத்திலிருந்து வரக்கூடிய ஒரு சாதாரண பெண் எவ்வாறு எதிர்கொள்கிறாள் என்பதைப் பற்றிய அலசல், மிக இலகுவான நடையில். வாசிப்பவர்களுக்கு எந்த விதமான சலிப்பையும் தந்துவிடாமல் எழுதப்பட்டிருப்பதுதான் இந்நூலின் சிறப்பென்பேன். துபாயைப் பற்றிய பெருமிதங்களை மட்டுமே பேசாமல். அதீதமான கற்பிதங்கள் எதையும் கலந்துவிடாமல், துபாய் நகர வாழ்வில் தான் கண்டு அனுபவித்தவற்றை அது குறித்த நேர்மையோடு பதிவு செய்திருக்கிறார்.
Be the first to rate this book.