இந்நூலில் இடம்பெற்றுள்ள பழமொழிகளுள் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
1.அசைந்து தின்கிறது யானை, அசையாமல் தின்கிறது வீடு. 2. எல்லோரும் பல்லக்கு ஏறினால், எவர்தான் பல்லக்கைத் தூக்குவது. 3. ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம், உள்ளே இருக்குதாம் ஈரும் பேனும். 4. துளசிக்கு வாசனையும் முள்ளுக்கு கூர்மையும் முளைக்கிறபோதே உண்டு. 5. நாலு வேதமும் தெரியும்; ஆறு சாஸ்திரம் தெரியும்; ஆனால் வாய் மட்டும் ஊமை. 6. பொன் ஊசி என்பதால் கண்ணைக் குத்திக் கொள்ளலாமா? 7. மகன் செத்தாலும் சாகட்டும்; மருமகள் தாலி அறுக்க வேணும். 8. உதடு தேய்வதை விட உள்ளங்கால் தேயலாம். 9. அறுக்கத் தெரியாதவன் இடுப்பில் ஆயிரத்தெட்டு கருக்கரிவாள். 10. ஆடத் தெரியாத தேவரடியாள் முற்றம் கோணல் என்றாளாம்.
Be the first to rate this book.