தமிழ் நாவலின் முதல் கட்டப் படைப்பாளிகளான மாயூரம் வேதநாயகம் பிள்ளை, சு.வை.குருசாமி சர்மா, ராஜமைய்யர், அ.மாதவையா உள்ளிட்டோரின் நாவல்கள் குறித்து ஏற்கெனவே எழுதிய சுப்பிரமணி இரமேஷ், அதன் தொடர்ச்சியாகப் புதுமைப்பித்தன், தொ.மு.சி. ரகுநாதன், ப.சிங்காரம் போன்றோரின் நாவல்களைச் சமகால உரையாடலுக்கு உட்படுத்தி இருபத்தைந்து கட்டுரைகளாக இந்நூலில் எழுதியுள்ளார். தமிழ்ப் புதின வரலாற்றுக்கு இவரது பங்களிப்பு ஆக்கப்பூர்வமானது. இப்படியான பதிவுகளைக் க.நா.சு.வுக்குப் பிறகு இவர் செய்வதாகக் கருதுகிறேன்.
- பேரா. வீ.அரசு
Be the first to rate this book.