தமிழுக்குள் நாவல் புதிதாகப் புகுந்தது; எழுத்தறிவுப் பரவலையொட்டி வளர்ந்தது; இலக்கியமா இல்லையா என்னும் விவாதத்தில் சிக்கி நிலைபெற்றது. தோன்றி அரை நூற்றாண்டு கடந்தும் தமிழ் உயர்கல்வியுலகம் நாவலை எதிர்கொள்ளத் தடுமாறியது. இத்தகு சூழலில் க. கைலாசபதி வரலாறும் திறனாய்வும் கலந்த நோக்கில் 1950களில் தமிழ் நாவல்களைக் கண்டு காட்ட முற்பட்டார். தொடர்ந்து அவர் எழுத நேர்ந்த பிற கட்டுரைகளும் சேர்ந்து 'தமிழ் நாவல் இலக்கியம் - திறனாய்வுக் கட்டுரைகள்' என இந்நூல் உருப்பெற்றது.
கைலாசபதி அதுவரை வெளிவந்த குறிப்பிடத்தக்க பல நாவல்களைத் தமக்கேயுரிய நடையில் சரளமாகத் திறனாய்ந்து காட்டியிருப்பதைப் படிப்பது அறிவார்ந்த கலை நல்கும் அனுபவமாகும்.
- பா. மதிவாணன்
Be the first to rate this book.