இந்த நூல் 9ஆம் நூற்றாண்டு முதல் 19ஆம் நூற்றாண்டு வரை தமிழகத்தில் நிகழ்ந்த தட்பவெப்ப நிலை மாற்றங்கள். இயற்கைப் பேரிடர்கள் மற்றும் மக்கள் பட்ட இன்னல்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்கிறது.
தமிழ் நிலப்பரப்பில் மழை நிலவரம் மற்றும் நீர்நிலைகள் பற்றி தெளிவாக எடுத்துக்கூறுகிறது. தமிழ்ச் சமூகம் சந்தித்த பஞ்சமும் வறட்சியும் விரிவாக அலசப்பட்டுள்ளது. தமிழகக் கடலோரப் பகுதியில் உருவான புயல். சூறாவளிக் காற்று. நிலம், கடல் மற்றும் நீரால் ஏற்பட்ட இடையுறுகள், குறிப்பாக வெள்ளம், நிலநடுக்கம், நெடும் பேரலை தாக்கங்கள், தமிழக சமூகத்திற்கு பேரழிவையும் துயரத்தையும் விளைவித்ததுள்ளதைப் பற்றியும் விவரிக்கிறது. ஐரோப்பியரின் தொழிற்நுட்ப அறிமுகத்தால் வெப்பமானி. காற்றழுத்தமானி, காற்று வேகமானி, மழைமானி, கப்பல் காற்றழுத்தமானி ஆகியவை பரவலாக தமிழகத்தின் பல இடங்களில் வைக்கப்பட்டு வானியல் மற்றும் காலநிலை ஆய்வுகள் செய்யப்பட்டதை சுட்டிக்காட்டுகிறது.
முன் அட்டைப்படம்: 1680ஆம் ஆண்டு புயலில் சிக்கிய டச்சுக் கம்பெனிக் கப்பல் (ரிக்ஸ் அருங்காட்சியகம், ஆம்ஸ்டர்டேம்)
Be the first to rate this book.