ராஜராஜ சோழனின் காந்தளூர் சாலை போர், தமிழகத்தில் வேத கல்வி வரலாறு, சாதிய பண்பாட்டில் குளங்களும் கோத்திரங்களும் போன்ற பல சிறப்பு வாய்ந்த வரலாற்றாய்வு நூல்களை இயற்றிய முனைவர் சி. இளங்கோ அவர்களின் அடுத்த படைப்பான சமீபத்தில் தமுஎகச நிகழ்த்திய -சனாதன ஒழிப்பு மாநாட்டில்-வெளியிட்ட “தமிழ்நாட்டில் சனாதான திணிப்பும் எதிர்ப்பும் ஒரு வரலாற்று பார்வை” - இந்நூல் தெற்கில் சமஸ்கிரமயமாவதற்கு முன்பிருந்த சமூக இயக்கம் - வடக்கில் உள்ள சனாதன (வர்ண் -சாதிய) முறைகளும் - இடைக்காலத்தில் சனாதன முறையை நியாயபடுத்தி இயற்றப்பட்ட பல நூல்களும் - பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் வில்லியம் ஜோன்ஸ் போன்ற கீழ் திசை ஆய்வாளர்கள் துணைக் கொண்டு எவ்வாறு ஏகாபத்தியம் சனாதனகொள்கையை தங்கள் சுரண்டலுக்காக பயன்படுத்தினர் என்றும் - பின்பு நவீன காலத்தில் இந்து பனாரஸ் நிறுவனம் போன்றவற்றால் எவ்வாறு சனாதான கொள்கை பரப்பப்பட்டது - மற்றும் சனாதான கொள்கைக்கு எதிரான இயக்கங்கள் போன்றவற்றை ஆதாரத்துடன் இந்நூல் வெளிக்கொனறுகிறது.
Be the first to rate this book.