தமிழ்ச் சிந்தனை மரபில் வள்ளலார் புறக்கணிக்க முடியாத முற்போக்காளர். முற்போக்கு என்பதே நாத்திகவாதிகளின் உரிமைப் பத்திரம் என்கிற பொதுப்புத்தி வள்ளலாரை வாசிக்க ஆரம்பிக்கும்போதே விலகிவிடும். அவர் ஆன்மநெறியை பகுத்தறிவோடு கலந்தவர். அதனாலேயே உருவ வழிபாட்டை மறுத்தார்.
வள்ளலாரைப் பற்றித் தமிழில் ஏராளமான நூல்கள் வந்துள்ளன. ஆனாலும் வள்ளலார் குறித்த வாசிப்பு வடலூரில் எரியும் அடுப்பைப் போல அணையாதது. அணைக்க முடியாதது. அருட்பா - மருட்பாச் சண்டை மட்டுமல்ல, ஆத்திக - நாத்திகச் சண்டைக்கும் சர்வரோக நிவாரணியாக நாம் வள்ளலாரையே அருந்த வேண்டியிருக்கிறது. அதற்கான தொடர்முயற்சிகளில் ஒன்றே இந்த நூல்.
Be the first to rate this book.