சிந்தனையும் சிரிப்பும்தான் மனிதனை விலங்குகளிலிருந்து வித்தியாசப்படுத்திக் காட்டிய முக்கிய அம்சங்கள். பட்டங்களால் தன் பெயரை அலங்கரிப்பவனைவிட, நல்ல சிந்தனைகளால் மனதை அலங்கரிப்பவனே மேன்மையானவன். சிலருடைய சிந்தனைகளில் உலக வரலாறு எழுச்சிப் பெற்றிருக்கிறது. எனவேதான் 'துப்பாக்கி முனையைவிட பேனா முனை வலியது' என்கிறார்கள். கால ஓட்டத்தில் நிகழும் மாற்றங்களை உள்வாங்கிச் செரித்து, சுய முகத்தை இழக்காமல் எந்தவொரு சமூகம் தன்னைப் புத்துருவாக்கம் செய்துகொள்கிறதோ, அதுவே உலகை வழிநடத்தக்கூடிய நிலைக்கு உயர்கிறது. அப்படிப்பட்ட இறுமாந்த நிலைக்கு தமிழினத்தைத் தகுதிப்படுத்தும் தத்துவார்த்த முயற்சியே 'தமிழ் மண்ணே வணக்கம்!' 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' _என்ற உலகளாவிய சித்தாந்தத்தில் தோய்ந்தெழுந்த தமிழனின் மகோன்னத வரலாற்றையும், தமிழ் கலாசாரத்தின் நிகழ்கால கோளாறையும் அலசி ஆராய்ந்திருக்கிறார்கள், மேன்மைமிகு அறிஞர் பெருமக்கள்.
Be the first to rate this book.