‘சுதேசமித்திரன்’, ‘தேசபக்தன்’, ‘தமிழ் ஸ்வராஜ்யா’, ‘தமிழ்நாடு’, ‘இந்தியா’, ‘ஜெய பாரதி’, ‘ஆனந்த குண போதினி’, ‘ஆனந்த போதினி’, ‘விகடன்’, ‘மணிக் கொடி’, ‘தினமணி’, ‘ஹிந்துஸ்தான்’ பத்திரிகைகள் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு. 1933இல், தமது பதினாறாம் வயதி லேயே, ஆனந்த விகடன் வழியாகத் தமிழ்ப் பத்திரிகை உலகில் நுழைந்துவிட்ட ரா. அ. பத்மநாபன், ஜெயபாரதி (193637), ஹநுமான் (1937), ஹிந்துஸ்தான் (1938), தினமணிக் கதிர் (196566) முதலான இதழ்களில் பணியாற்றியவர். ஓர் ஆராய்ச்சியாளராகத் தமிழ் இதழ்களைத் தேடிப்படித்ததோடு, தமிழ் இதழியலின் வளர்ச்சியை நேரடியாகப் பார்த்தும் பணியாற்றியும் வாழ்ந்தும் அனுபவித்தவர். அந்த வகையில் நிகழ்ச்சிக் கோவையாகவும் தகவல் களஞ்சியமாகவும் இந்நூல் சுவைபட அமைந்துள்ளது. ஸ்வராஜ்யா, தமிழ்நாடு, இந்தியா, ஹிந்துஸ்தான் முதலான காண்பதற்கரிய இதழ்களைப் பற்றிய முக்கியச் செய்திகளும் இந்நூலில் அடங்கியுள்ளன.
Be the first to rate this book.