இந்த நூல் தமிழில் மொழிபெயர்ப்பின் பரிணாம வளர்ச்சியையும், அச்சுக்கு முன் அச்சுக்கால மொழிபெயர்ப்பு பற்றியும் ஆழமாக ஆய்வு செய்கிறது.
இலத்தீன்,போர்ச்சுக்கீஸ்,இத்தாலி, டச்சு, ஜெர்மன்,மற்றும் ஆங்கில மொழி நூல்களை ஐரோப்பியர் மொழிபெயர்த்தது குறித்து விளக்குகிறது. ஐரோப்பியர்களாலும் தமிழர்களாலும் ஆங்கிலம்,சமஸ்கிருதம்,மராத்தி,வங்காளம் மற்றும் தெலுங்கிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்ததை எடுத்துக் கூறுகிறது. தமிழிலிருந்து போர்ச்சுக்கல், இலத்தீன், டேனிஷ், ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகளுக்கு ஐரோப்பியர் மொழிபெயர்த்ததை விவரிக்கிறது.
ஈப்ரு, கிரேக்கம், ஜெர்மன், போர்ச்சுக்கீஸ், இலத்தீன் மற்றும் ஆங்கில மொழிகளிலிருந்து தமிழில் விவிலிய மொழிபெயர்ப்பு செய்த விவரங்களும், மொழிபெயர்ப்பு செய்த காலத்தில் தமிழ் உரைநடையின் வளர்ச்சி,நடை மற்றும் அச்சாக்கத்தின் தாக்கம் குறித்த விவரங்களும் இந்த நூலில் உள்ளன
Be the first to rate this book.