அ.ராமசாமி தமிழ் சினிமா குறித்த மிக ஆழமான பார்வைகளைத் தொடர்ந்து முன்வைத்து வருபவர். பிம்பங்களுக்கும் பார்வையாளனுக்கு இடையிலான உறவுகளை மிக நுட்பமான தளத்தில் இந்தக் கட்டுரைகள் முன்வைக்கின்றன. பல்வேறு நிலைகளில் கவனத்தை ஈர்த்த, சலனங்களை ஏற்படுத்திய கதை திரைக்கதை வசனம் இயக்கம், மெட்ராஸ், திருமணம் என்னும் நிக்காஹ், விஸ்வரூபம், அரவான், ஏழாம் அறிவு. டர்ட்டி பிக்சர்ஸ், அழகர்சாமியின் குதிரை, ஈசன், பரதேசி, அவன் இவன், நான் கடவுள், எந்திரன், ராவணன், கந்தசாமி எனப் பல படங்களைப் பற்றி மிகச் செறிவான பார்வைகளை இக்கட்டுரைகள் உருவாக்குகின்றன. அந்த வகையில் சினிமா ரசனையின் மீது இந்த நூல் கோட்பாடு சார்ந்த வெளிச்ச்சங்களைத் தருகிறது.
Be the first to rate this book.