உவேசா, பாரதியார், பாரதிதாசன், ஜி.யு. போப், கால்ட்வெல், மறைமலையடிகள், வ.உ. சிதம்பரனார் என்று தொடங்கி தமிழ் மொழியின் வளர்ச்சிக்குத் தனித்துவமான முறையில் பங்களிப்பு செய்த பல அறிஞர்கள் இந்நூலில் இடம்பெற்றிருக்கிறார்கள். இவர்களில் சிலர் கவிஞர்கள். சிலர் தேச விடுதலைப் போராளிகள். சிலர் வழக்கறிஞர்கள். சிலர் பேராசிரியர்களாகவும் மொழியியல் ஆய்வாளர்களாகவும் திறனாய்வாளர்களாகவும் விமரிசகர்களாகவும் இருந்தவர்கள்.
விலை மதிப்பில்லா மூலப்பிரதிகளை அழிவிலிருந்து மீட்டெடுத்தவர்களும் அவற்றுக்கு அழகிய முறையில் உரை எழுதியவர்களும் அந்த உரைகளைப் பரவலாக மக்களிடம் கொண்டுசென்று சேர்த்தவர்களும்கூட இதில் இருக்கிறார்கள்.
இவர்களுடைய அடையாளம் தமிழ் என்றால் தமிழின் அடையாளம் இந்த அறிஞர்கள். தொல்காப்பியத் தமிழை இன்றைய நவீன காலத்துக்கு ஏற்ற வகையில் வளர்த்தெடுத்து, செழுமைப்படுத்தியவர்கள் இவர்கள்தாம். இறையியல், இலக்கியம், கலாசாரம், வரலாறு, தத்துவம், அழகியல் என்று தொடங்கி ஒவ்வொன்றிலும் தமிழ் செழித்தோங்கி வளர்ந்ததற்கு இந்தத் தமிழறிஞர்களே காரணம்.இவர்கள் இன்றி தமிழ் இல்லை. தமிழின்றி நாமில்லை. எனவே இது நம் புத்தகம்.
Be the first to rate this book.