பௌத்த, சமணக் கோட்பாடுகளை விரிவான களத்தில் எடுத்து வைத்து அவற்றின் பன்முகத் தன்மைகளை விளக்கியிருக்கும் முயற்சி தமிழ் அற இலக்கியங்களில் அவற்றை வைத்து ஒப்பிட்டும் உறழ்ந்தும் பார்ப்பதற்குக் கதவுகளைத் திறந்து வைத்திருக்கிறது.
- கவிஞர் ஈரோடு தமிழன்பன்
இந்நாட்டின் தொல்பழம் சிந்தனைக் கருவூலமாக விளங்கும் பௌத்த, சமண அறக்கோட்பாடுகளைப் பற்றிய அடிப்படை நூல்களை ஆழமாகப் பயின்று தமிழ் அறைலக்கியங்களில் அவற்றின் தாக்கத்தினை இந்த நூலில் அழகாகவும் சிறப்புறவும் ஆராய்ந்துள்ளார்.
- முனைவர் சோ. ந. கந்தசாமி
இந்நூல் ஏழு இயல்களாகப் பிரிக்கப்பட்டு அமைக்கப்பட்டுள்ளது. தமிழ் அறைலக்கியங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள பௌத்த, சமண அறவியற் சிந்தனைகளை அடையாளம் காணுதல், தமிழ் சமூகத்தின் தன்னியல்பும், முகிழ்ப்புமாய் உள்ள தனித்தன்மை வாய்ந்த அறவியற் சிந்தனைகளை வரையறுத்தல் ஆகிய நோக்கங்களை இந்நூல் முன்வைக்கிறது.
- முனைவர் க. குளத்தூரான்
Be the first to rate this book.