மகாத்மா காந்தியடிகளாலேயே ‘குருதேவர்’ என்றழைக்கப்பட்டவர் மகாகவி இரவீந்திரநாத தாகூர். தமது 31 வது வயதில் 1892 ல் ‘கல்வியில் பொருத்தமற்ற நிலை’ என்ற வெளியீட்டின் மூலம் பிரிட்டிஷ் இந்தியாவின் கல்விமுறையைக் கூர்மையான விமர்சனங்களுக்கு உட்படுத்தினார். இது வெளியான 10 ஆண்டுகளில் அவர் சாந்தி நிகேதனில் பிரமச்சரிய ஆசிரமத்தை அமைத்தார். ‘புதிய அறிவுப்பரவலும் ஏற்பும் தாய்மொழிக் கல்வியால் மேம்படும்; ஆங்கில பாணியைத் திறனற்ற முறையில் தழுவ முயன்றால் வெகு சிலருக்கு அது அரைகுறைக் கல்வியைத் தரும்’ என்பதே தாகூரின் அப்போதைய கருத்து.‘கல்லூரிக்கல்வியையும், தேசத்தின் வாழ்க்கையையும் இணைப்பது; வெறும் அந்நியப் புத்தகங்களைப் படிப்பதோடு நின்று விடாமல் தமது நாட்டையும், தமது மக்களையும் படித்தறிய வேண்டுமென்று’ தாகூர் தம் உரைகளிலும், கட்டுரைகளிலும் வலியுறுத்தினார்’’ கல்வி மூலமாக அன்னிய மேலாதிக்கம் நிலைநாட்டப்படுவதை ஏற்கமுடியாது; நமது கட்டுப்பாட்டில் கல்வியைக் கொண்டு வர வேண்டும்; அன்னியக் கல்வியை அச்சுப்பிசகாது நாம் அப்படியே பின்பற்றினால் நமக்கு மனவளமோ, பலன்களோ இரண்டுமே கிடைக்காது’’ என்றார்.
Be the first to rate this book.