தனியறையின் மங்கலொளியில் கோபி மிகுந்த சிரமத்துடன் தன் கடந்தகால வாழ்வின் சித்திரத்தை நினைவுகூரும்போது, சோர்வுற்றபோதெல்லாம் நிறுத்திவிட்டு வெளியே வந்தார்.
கேள்விகளுக்கான அர்த்தமோ இடப்பொருத்தமோகூட இந்த நேர்முகம் சம்பந்தப்பட்டு இல்லை.
பேச்சின் பின்னணியாக பக்கத்து வீடுகள் ஒன்றிலிருந்து யாரிடமோ தொடர்ந்து அடி வாங்கி தன் கதறலின் மூர்க்கத்தை மேலும் மேலும் அதிகரித்த ஒரு சிறுமியின் நிராதரவுக் குரல் தாழிட்ட கதவின் இடுக்கு வழியாக கசிந்தபடியிருந்தது.
பேச்சு முடிந்த வெகுநேரம் நீடித்த சஞ்சலமான அமைதியில், “நான் சொன்னதெல்லாம் மிகவும் அசிங்கமாக இருக்கிறதா” என்று கேட்டார் கோபி.
- யூமா வாசுகி
Be the first to rate this book.