கவிதை ரகசியத்தில் அவிழும் பூவிதழ்கள் போன்றது.சமயத்தில் செங்குழம்பை விசிறும் எரிமலை போன்றது.எரிமலைக் குழம்பாகவும் கண்ணீரில் விரியும் பூவிதழாகவும் நம்மை அசைத்தபடி தெறிக்கின்றன அகரமுதல்வனின் பிம்பங்கள். சில கவிதைகளுக்குள் என்னால் உடனடியில் நுழைந்து விடமுடிகிறது.
கவிதை மெளனத்தின் நொடி அசைவில் திறவு பட வேண்டும். கவிதையில் மொழியின் இறுக்கமும் உறைவும் அகரமுதல்வனின் நாடற்ற வாழ்வின் இருக்கமும் உறைவும் தந்ததாகவும் இருக்கலாம். சில கவிதைகளின் கதவுகளை இரண்டு மூன்று வாசிப்புகளின் பின் தான் திறக்க முடிகிற அளவு இறுக்கமாக இருக்கிறது.
ரத்தம் கலவாத துப்புரவான கடல் அகரமுதல்வனின் கதவு. அதுவே நிறந்தரம். அதுவே மோனம். இருள் புலரும் சூரியன் வருவான். அதுவே எதிர்கால நம்பிக்கை. இப்படித்தான் பேரவலத்திலிருந்து மீளும் நம்பிக்கையின் குரலாக அகர முதல்வனின் கவிதைகள் இருக்கின்றன.
Be the first to rate this book.