நல்ல இலக்கியம் என்பது, உண்மையை ஒரு படைப்பாளன் தேடும் தவம். உண்மையை அவனவன் கண்ட விதத்தில் வெளிப்படுத்தும்போது மனிதக்குரல்களையும் முகங்களையும் போல சாயங்களும் தனித்தன்மையும் வளமாக கொழிக்கின்றன. உண்மையைக் காணத் திராயி இல்லாதவர்கள் வேறு எவற்றுக்கெல்லாமோ ஆசைப்பட்டு தங்களையே நகல்களாக்கிக் கொண்டு விடுகிறார்கள். பலபேர் வார்ப்படம் வைத்துக்கொண்டு ஒரே மாதிரியாக பொம்மை செய்து கொண்டே போகிறார்கள். போலி என்பதைக் கூட்டிக் கொண்டு போகிறார்கள்.
மனித முகங்கள் வேறுபடுவதைப் போலதான் நல்ல இலக்கிய முயற்சிகள் வேறுபடுகின்றன. வேறுபட வேண்டும். தான் உண்மை என்று தேடிய வழியையும் கண்டதையும், சமூகத்திற்கோ, பெரியார்களுக்கோ, கெட்ட பெயருக்கோ, புறக்கணிப்புக்கோ பயப்படாமல் ஒருவர் சொல்லும்போது அதில் தனித்துவமும் இருக்கும்.
Be the first to rate this book.