புலம்பெயர் இளம் சமுதாயத்துக்கு, அதன் வேர்களைநல்லன, அல்லாதன உட்பட மண்ணுருவி வெளிக்காட்ட, மரபின் அறிவும் புதிதின் பரிச்சயமும், சொல்வன தெளிந்து சொல்வகை சிறக்கச் சொல்பவர்களின் தேவை மிகவும் முக்கியமாகின்றது.
இவ்வகையிலே சந்திரலேகா அவர்களின் இந்நூல் ஒரு பங்களிப்பாகிச் சிறப்படைகின்றது. மொழி, சமயம் குறித்த கல்வியறிவும் கற்பிப்புப் பட்டறிவும் ஒருங்கே வாய்த்திருக்கும் அவர் பொருத்தமாக, இளையோர் மட்டுமன்றி, அறிந்த பெரியவர்களும் தம்மறிவினை விரித்துக்கொள்ளும் முகமாகத் தேர்ந்தெடுத்த தலைப்புகளின் கீழே அவுஸ்திரேலியத் தமிழ் வானொலியிலே ‘சுழலும் தமிழ் உலகம்’ என்ற நிகழச்சியிலே வழங்கிய உரைகளின் தொகுப்பே இந்நூல். மொழி, வாழ்க்கை, பெண்கள், குடும்பம், பண்டிகை, பொதுவான கருக்கள் ஆகியவற்றை மையங்களாக்கி முப்பது கட்டுரைகள், பொருட்செறிவோடும் சொற்சிக்கனத் தோடும் வரையப்பட்டிருக்கின்றன.
Be the first to rate this book.