பாரதம் தமிழ்நாட்டில் பல வடிவங்களில் உலவிவருகிறது. செவ்வியல் இலக்கியங்களாக, அம்மானைப் பாடல்களாக, உரைநடை ஆக்கங்களாக, கீர்த்தனைப் பாடல்களாக, தெருக் கூத்துப் பனுவல்களாக, மக்கள் வழக்காறுகளாக...
இருபதாம் நூற்றாண்டின் நாடகவடிவம் இசைநாடகம் என்று வழங்கப்படும் அரங்க வடிவம். சங்கரதாச சுவாமி முதலியவர்களால் உருவாக்கி வளப்படுத்தப்பட்டது இந்த வடிவம். அவரது மாணவர்களில் ஒருவரான சுப்பிரமணிய அய்யர் பாரதக் கதையின் முக்கியமான நிகழ்வுகளை இசை நாடக வடிவில் ஆக்கியுள்ளார்.
வடிவம், இசை, கற்பனை ஆற்றல், புனைதிறன் முதலியன கைவரப்பெற்ற இவரது படைப்புகளாக இந்த ஐந்து நாடகங்கள் உருவாகியுள்ளன. இந்தப் பகுதியில் ஏற்கெனவே வழங்கிவரும் தெருக்கூத்து என்ற வடிவத்திற்கான பனுவல்களின் அடிப்படையிலேயே இந்த நாடகங்கள் ஆக்கப்பட்டுள்ளன.
நாடக ஈடுபாட்டாளர்களுக்கு இந்நூல் ஒரு புது விருந்து.
Be the first to rate this book.