’சுவை பட உண்…’
நூல் தலைப்பில் புதுமை இருப்பதைப் போல, உள்ளிருக்கும் உணவுகளிலும் நிறையவே புதுமை இருக்கிறது. இந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ள உணவு ரகங்களின் பெயர்களை முதலில் படிக்கும் போது, வாய்க்குள் நுழைவதற்கே கடினமாக இருந்தது! அதாவது வெவ்வேறு நாடுகளில் புழக்கத்தில் இருக்கும் பாரம்பரிய உணவுகளைத் தொகுத்து வழங்கியதோடு, அந்நாட்டு மொழிகளிலேயே பெயர்களும் பதிவு செய்யப்பட்டிப்பது சிறப்பு!
வெவ்வேறு நாட்டு உணவுகளின் பெயர்கள் வாய்க்குள் நுழையாவிட்டாலும், அவ்வுணவுகளை சமைத்து சாப்பிட்டால், பலமுறை வாய்க்குள் நுழையும் என்றே நினைக்கிறேன். படிக்கும் போதே நாவூறுவதை தவிர்க்க முடியவில்லை. பல்வேறு உணவு ரகங்கள்… அதன் தயாரிப்பு முறைகள் என அழகிய உணவுத் தொகுப்பு இந்த நூல்! பல்வேறு நாட்டு உணவுகள் மட்டுமல்லாமல், நாம் மறந்து போன, சமைக்க தவிர்த்த நமது பாரம்பரிய உணவுகளும் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன. மறைந்திருக்கும் பல்வேறு பொக்கிஷங்களை வெளிக்கொணர்ந்த மரு.விக்ரம்குமாருக்கு பாராட்டுகள்!
ஒவ்வொரு உணவு ரகமும் மருத்துவ குணங்களை உள்ளடக்கிய சிறப்பு உணவுகளாக இருப்பது குறிப்பிடத்தக்கது. உணவுப் பொருளாக மட்டுமல்லாமல், மருந்தாகவும் இருக்கும் ரெசிப்பிகள், வாசிப்போரை நிச்சயம் கவரும்!
சுவை பட உண்… அனைவரது சமையலறையிலும் இடம் பெற வேண்டிய அவசியமான நூல்!
Be the first to rate this book.