“ சூழலியல் துறையின் கருதுகோள்களை எளிய தமிழில் வெளிப்படுத்தி தமிழ்மக்களிடையே, சுற்றுச்சூழல், பல்லுயிரியம் பற்றிய விழிப்பு உருவாக்கப்பட முடியும் என்ற நம்பிக்கையை இந்த நூலில் ஆசிரியர் காட்டுகின்றார். இவ்வாறு விளக்கினால் தான் சூழழியல் சீர்கேட்டிற்கும் வறுமைக்கும் உள்ள தொடர்பு, நம் வாழ்வின் அன்றாட வளத்திற்கும் பல்லுயிரியத்திற்கும் உள்ள பிணைப்பு ஆகியவற்றை சாமானிய மக்களும் அறிந்து, உணர்ந்து செயல்பட முடியும். ”
- தியோடர் பாஸ்கரன்
“ ஊரை சுத்தம் செய்யும் தலித்களைப் பற்றிய அக்கறை கொள்கிறார். அவர்களது வாழ்நிலை சிறக்க தன்னாலான தீர்வுகளை முன்வைக்கிறார். ஊரைச் சுத்தம் செய்யும் தலித்துகளை குடிநோயாளிகளாக மாற்றும் இன்றைய சமூக அவலத்தை வேதனையோடு பார்க்கிறார். இவர்கள் அள்ளிக் குவிக்கும் குப்பையிலிருந்து உரம் தயாரிக்கவும், மின்சாரம் தயாரிக்கவுமான தொழில்நுட்பத்தையும் பொருளாதாரத்தையும் இவர்களுக்கு வழங்கி இவர்களது வாழ்நிலையை உயர்த்தவேண்டும் என்கிற இவரது ஆலோசனையை திறந்த மனதோடு நாம் விவாதிப்பது நல்லது.”
- இரா. எட்வின்
கல்வியாளர்
ஆசிரியர். காக்கை சிறகினிலே
Be the first to rate this book.