வழக்கமாக, சுதந்திரப் போராட்டம் பற்றிய நூல்கள் எல்லாம் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இருந்துதான் தொடங்கும். இந்த நூலில் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் கிரேக்க அரசரான அலெக்சாண்டர் படையெடுத்து வந்தது முதல் மொகலாயர்கள், ஆங்கிலேயர்கள், பிரெஞ்சு நாட்டவர் போன்றவர்கள் அடுத்தடுத்து தேசத்தில் புகுந்து, நாட்டை அடிமைப்படுத்திய விதம் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
முகலாயர்கள் காலத்தில் முகமதியர்களுக்கும் இந்துக்களுக்கும் இடையே தோன்றிய முரண்பாடுகளைச் சரி செய்யும் விதமாக, இரண்டுக்கும் மாற்றாகத் தோன்றிய மதமே சீக்கிய மதம் என்று நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
மகாத்மா காந்தியும், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் உள்ளிட்ட பல தலைவர்களும் சுதந்திரத்துக்காகப் பல்வேறு போராட்டங்களை நடத்தியது, இறுதியில் ஆங்கிலேயர்கள் வேறு வழியின்றி சுதந்திரம் அளித்தது ஆகியவை தொடர்பான ஏராளமான நிகழ்வுகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.
சுதந்திரப் போராட்டம் குறித்து எண்ணற்ற நூல்கள் வெளிவந்திருந்தாலும், இதுவரை கேள்விப்பட்டிராத அரிய பல தகவல்கள் இந்த நூலில் இருப்பது சிறப்பு.
Be the first to rate this book.