சுதந்தர பூமியை வெறும் அரசியல் நாவல் என்று வகைப்படுத்திவிட முடியாது. இந்நாவல் முன்வைக்கும் கவலைகளும், கேள்விகளும் சுதந்தரம் அடைந்த நாளாக நம்முடன் தொடர்ந்து வருபவை.
1973-ல் இந்நாவல் முதல்முதலாக வெளியானபோது மிகுந்த கவனத்தையும், சர்ச்சைகளையும் சம்பாதித்தது. அந்த சர்ச்சைகள் இப்போதுகூட உயிருடந்தான் இருக்கின்றன.
கொள்கைகளையும் கோட்பாடுகளையும் கட்சிக்கொடிகளோடு சேர்த்து காற்றில் பறக்கவிட்டு அரசியல் நடத்திக் கொண்டு இருப்போரே இந்நாவலின் இலக்கு.
அரசியல்வாதிகளின் நிஜ முகங்களை இ.பா.வைப் போல் அப்பட்டமாக எழுத்தில் பதிவு செய்தவர்கள் குறைவு.
Be the first to rate this book.