தமிழில் கட்டுரைகள் என்றாலே சிடுக்கு மொழியும், ஜாங்கிரி சுற்றுதலும் தானாகவே வந்து விடுகின்றன. அப்படி எழுதினால்தான் தீவிர கட்டுரை என்ற ஒரு அந்தஸ்தும் கிடைக்கும். நன்கு எழுதிக்கொண்டிருக்கும் ஒரு எழுத்தாளர் கட்டுரை என்று வந்தவுடன் பரணில் ஏறி அமர்ந்து கொண்டு இடது காலால் கூரையில் எழுத ஆரம்பித்து விடுகிறார். இந்த சுழலில் மாட்டிக்கொள்ளாமல் அராத்து சரளமான மொழியில் அவரின் பார்வையை எந்த பாசாங்கும் இன்றி சொல்லிச் செல்கிறார். அரசியல், சமூகம், உறவுகள், பயணம், பப் என அராத்தின் கட்டுரை உலகம் எங்கெங்கோ சஞ்சரிக்கின்றன. அனைத்து கட்டுரைகளிலும் இருக்கும் பொதுவான அம்சம், புதிய பார்வை, சுவாரசியம் மற்றும் சமரசமில்லா தனித்தன்மை. இன்னும் ஆயிரம் வருடங்கள் கழித்து இதைப் படித்துப் பார்க்கும் சமூகம், அப்போதே அராத்து இப்படி எழுதி இருக்கிறாரா என்று வியப்படையப் போவது உறுதி!
ஸ்ரீநிவாஸன் ராமானுஜம்.
Be the first to rate this book.