நீண்ட நெடுங்காலமாக ஸுன்னா கற்கை நெறியைக் கற்பித்து வந்துள்ள பேராசிரியர் கர்ளாவியின் ஆழ்ந்த புலமையும், அனுபவத் திரட்சியும் இந்த ஆக்கத்தில் துலக்கம் பெற்று விளங்குகின்றன.
இலகுவான, யதார்த்தமான, சமநிலை பேணும் ஒன்றிணைந்த பரிபூரண நெறியாக ஸுன்னா அமைந்துள்ள தன்மையை தெளிவுறுத்திக் காட்டும் பேராசிரியரின் வாதங்கள் நுணுக்கமானவை, சிந்தனைக்கு விருந்தாய் அமைபவை.
ஷரீஆவின் மரபு ரீதியான அறிவினை சமகால முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் சவால்களதும் பிரச்சினைகளதும் மீதேற்றிக் காணும் அவரது முனைவுகள் காரணமாக சிந்தனைக் குழப்பங்களிலிருந்து நாம் இலகுவாகத் தெளிவு பெற்றுக்கொள்ள முடிகின்றது.
அன்றாட வாழ்வில் ஸுன்னாவின் பிரயோகம் இலகுபடுத்தப்பட வேண்டும் எனவும், குர்ஆனின் அருளை நாம் ஈட்டிக் கொள்வதற்கான ஒரு சாதனமே ஸுன்னா எனவும் அவர் காட்டித் தருகின்றார். நம்பிக்கையூட்டுவதன்றி சிரமங்களுக்கு ஆளாக்குவதொன்றல்ல ஸுன்னா. அதனை விளங்கிக் கொள்வதில் நாம் கொண்டுள்ள அசிரத்தை காரணமாக ஸுன்னாவின் அறிவுத் தேட்டத்தில் நாம் மிகவும் பின்தங்கியவர்களாகவே உள்ளோம். அதில் நாம் போதியளவு பரிச்சயம் பெற்றுக்கொள்ள வேண்டும். அதன் அங்கங்களை சரிவர மதிப்பீடு செய்துகொள்ள வேண்டும். பின்னர் அதனை நேர்மையாக, சமநிலை சிந்தனைத் தெளிவு என்பவற்றுடன் பிரயோகம் செய்து காண வேண்டும் முதலியனவே பேராசிரியர் கர்ளாவி ஆசிப்பது.
Be the first to rate this book.