இன்றைக்கு செல்போனுக்குள் உலகம் இருக்கிறது. ஒரு க்ளிக்கில் பைசா செலவில்லாமல் யாருடனும் பேசலாம்; வீடியோவில் யாருடனும் அரட்டையடிக்கலாம்; ஃபேஸ்புக், ட்விட்டர், கூகுள் என்று சுற்றிவரலாம்; விளையாடலாம்; பணம் சம்பாதிக்கலாம்… இவை அனைத்துக்கும் அடிப்படை, எலக்ட்ரானிக், தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்புத் துறைகளில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய மாற்றங்கள்.
இந்தியத் தொலைத்தொடர்புத்துறை முன்னேற்றத்தை எழுதுகிற எவரும் சுனில் மிட்டலுடைய வாழ்க்கையைக் குறிப்பிடாமல் நகர இயலாது. ‘ஏர்டெல்’ என்கிற ஒரே ஒரு பிராண்டால் அவர் இன்றைக்கு அறியப்பட்டாலும், மிகப் பெரிய கனவுகளுடன் பல நிறுவனங்களை, பல தயாரிப்புகளை, பல சேவைகளை அறிமுகப்படுத்தி வெற்றி கண்டவர் அவர்.
‘ஏர்டெல்’ சுனில் மிட்டலுடைய வாழ்க்கை வரலாற்றைத் துல்லியமாகவும் சிறப்பாகவும் எளிமையாகவும் பதிவு செய்கிற நூல் இது. திருபாய் அம்பானி, பில் கேட்ஸ், இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி, லட்சுமி மிட்டல் உள்ளிட்ட பல சாதனையாளர்களுடைய வாழ்க்கையை எழுதியிருக்கும் என். சொக்கனுடைய சுவையான எழுத்தில் சுனில் மிட்டலின் வெற்றிக்கதையைப் படியுங்கள், கனவு காணுங்கள், அவற்றை உண்மையாக்கத் தொடங்குங்கள்.
Be the first to rate this book.