உலகின் மிகப் புதுமையான தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் அதை வழி நடத்தபோகும் புதிய தலைவர் பற்றிய ஒரு கூர்மையான பார்வை:
2015 ஆகஸ்ட் மாதம் பத்தாம் தேதி, அடக்கமான ஒரு தொழில் நுட்ப வல்லுநர், பெரும் ஐ டி நிறுவனமான கூகிளின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
இவர் ஐ.ஐ.டி. காரக்பூரில் படித்தவர். சுந்தர் பிச்சையின் நியமனத்தை எதிர்பார்க்க முடியாதது என்று நாம் சொல்ல முடியாது. ஏனெனில் கூகிளில் இவர் தொட்டதெல்லாம் பொன்னாகி இருக்கின்றன. அவர் உருவாக்கிய அல்லது வழிநடத்திய எல்லாத் தயாரிப்புகளுமே வெற்றி பெற்றிருக்கின்றன-குரோம்,குரோம் ஓஎஸ்,ஆண்டிராய்டு இப்படிப் பலவற்றை சொல்லலாம்.
மக்களை வழிநடத்துவதிலும், புதுமையாக யோசிப்பதிலும் இவர் தேர்ந்தவர்.
ஆனாலும், கூகிள் தன் தயாரிப்புகளை ஒழுங்குபடுத்தி, அதில் முன்பைவிட குறைவான பொறுப்புகளைக் கொண்ட அதே நேரம் முழுமையான கவனக் குவிப்பை அதிகரித்த கூகிளின் தலைவராக சுந்தர் பிச்சை நியமனம் செய்யப்பட்டதில் சில கேள்விகள் எழும்புவதை தவிர்க்க முடியாது. வருங்கால கூகிளில் சுந்தர் பிச்சையின் பங்கு என்ன?
ஏற்கனவே உள்ள தயாரிப்புகளில் கூகிள் கவனம் செலுத்துமா அல்லது புதிய தயாரிப்புகளில் கவனம் குவிக்குமா?
பேஜ், ப்ரின் மற்றும் ஷிமிடால் உருவாக்கப்பட்டு வழிநடத்தப்பட்ட கூகிளை, சுந்தர் பிச்சை முன்னே கொண்டு செல்வாரா அல்லது அவரது விமர்சகர்கள் சொல்வதுபோல இந்த முக்கியமான பொறுப்புக்கு அவர் இன்னும் தயாராகவில்லையா?
கூகிளின் வருங்காலம் இந்த கேள்விகளுக்கெல்லாம் அவரது கடந்த காலத்தை ஆராய்ந்து பதில் சொல்ல முனைகிறது.
சுந்தர் பிச்சையின் குழந்தைப் பருவம், கல்வி, தொழில்நுட்ப உலகில் அவர் புகுந்தது, கூகிளில் அவர் வளர்ந்தது, கூகிளின் முக்கியமான தயாரிப்புகளை அவர் வழி நடத்தியது போன்ற பல விஷயங்களை இந்தப் புத்தகம் ஆராய்கிறது.
சரியான நேரத்தில் வந்திருக்கும் இந்தப் புத்தகம், 21ம் நூற்றாண்டின் மிக முக்கிய நிறுவனமாக கூகிள் எப்படி உருவானது என்பதைப் பற்றியும், அதனை முதலிடத்துக்கு கொண்டு சென்ற அதன் சூழல் பற்றியும் விரிவாக எடுத்துரைக்கிறது.
ஜக்மோகன் எஸ்.பன்வர் இந்தியாவின் 3 மிகப் பெரிய வங்கிகளின் தேசிய மற்றும் சர்வதேச பரிவர்த்தனைகளை கையாளுவதில் பங்கு வகித்திருக்கிறார். சமீப காலமாக பல்வேறு நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுக்கும்,செயற்குழு உறுப்பினர்களுக்கும், பிரத்யேக பயிற்சிகள் அளித்து வருகிறார்.
பன்வரின் தலைமைத் திறன் மற்றும் செயல் நோக்கம் பற்றிய கருத்தரங்கங்கள் பலரின் தனிப்பட்ட வாழ்விலும், தொழில் அணுகுமுறைகளிலும், மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
Be the first to rate this book.