தலையில் சடைமுடியையும் அந்தச் சடைமுடியில் கங்கையையும் கொண்டவன் சிவன். அந்தச் சிவன் அணிந்துகொள்ளும் மாலையைக் கட்டி அணிவிக்கும் வேலையையும் திருநீறு வழங்கும் வேலையையும் செய்து வந்தவர் ஆலால சுந்தரர். ஒருநாள் அவர் சிவனுக்குச் சாற்றுவதற்காக மலர் பறிக்க நந்தவனத்திற்குப் போனார். அந்த நந்தவனத்தில் மலர் பறித்து இறைவிக்குச் சூட்டுவதற்காக இரண்டு பெண்கள் போயிருந்தனர். அநிந்திதை, கமலினி என்பது அவர்கள் பெயர். இறைப்பணி மட்டுமே தனது பணி என்று செய்துகொண்டிருந்த ஆலால சுந்தரர் அந்த இரு அழகிய பெண்களையும் பார்த்தார். அவர்கள்மேல் காதல் அவருக்குத் தோன்றியது. இதனை அறிந்தார் சிவன். "காதல் செய்வதற்கு உரிய இடம் கயிலாய மலை இல்லை. நீ கொண்ட காதலைப் பூமியின் தென்பகுதியில் உள்ள தமிழகத்தில் சென்று அனுபவித்துவிட்டு மீண்டும் திருக்கயிலாயத்துக்கு வா!" என்று ஆணையிட்டார்.
Be the first to rate this book.