'இராமன் வாழ்க்கையை வாழலாம், கிருஷ்ணன் பேச்சைக் கேட்கலாம்' என்பாரகள். கம்ப ராமாயணத்தில் சுந்தர காண்டத்துக்கு ஓர் உசத்தியான இடம் உண்டு. நம் வீட்டுப் பெரியவர்கள் 'சுந்தர காண்டம் படி, தொல்லை அகலும்' என்று அறிவுறுத்துவார்கள். சோகத்தைச் சுட்டெரிக்கும் அந்த சுந்தர காண்டத்தை கம்ப ரசம் மாறாமல் எடுத்து நீட்டுகிறார் நூலாசிரியர் பழ. பழநியப்பன். யார் இவர்? கம்பனைத் தெரிந்தவர்களுக்கெல்லாம் இவரையும் தெரியும். 'கம்பர் காவலர்', 'கம்பனடிசூடி' என்று பெரும் கீர்த்தியெல்லாம் பெற்றவர். காரைக்குடி கம்பன் கழகத்தின் செயலாளர். புத்தகத்துக்குள் கம்பக் கற்பகம் கலைமணம் வீசுகிறது... வாருங்கள், உள்ளே நுழையலாம்..
Be the first to rate this book.