ஒரு மொழியின் உன்னதம் என்று சொன்னால் அம்மொழியில் காணப்படும் கவிதைகள் தான் உக்கிரத் தேடலில் கிடைப்பவை கவிதைகள் ஒரு மொழியின் இலக்கிய வடிவங்களில் எப்போதுமே ஒரு சிறப்பான இடத்தை தக்க வைத்துக் கொண்டிருப்பவை கவிதைகள் மட்டுமே அவை எப்போதுமே வாழ்வின் கனையிலிருந்து ஊற்றெடுக்கிறது தெளிவாக ஓடித் தன் போக்கைத் தீர்மானித்துக் கொள்கிறது காலந்தோறும் கவிதைகள் காவியங்களாகவும் தனிப்பாடல்களாகவும் உருமாறிக் கொண்டே இருந்திருக்கின்றன தன் கவித்வத்தைக் காத்துக்கொண்டு.
Be the first to rate this book.