வாழ்க்கையைக் கற்றறிந்தவர்களும், வாழ்வின் ஆழம் தெரிந்தவர்களும், வயதில் முதியவர்களும் சொல்லிவைத்த பழமொழிகள், தத்துவங்கள், சொலவடைகள், வைத்திய முறைகள், சடங்கு சம்பிரதாயங்கள் போன்ற அனைத்தும் அவர்கள் நேரடியாக தங்களது வாழ்விலிருந்து அனுபவித்து, ஆராய்ந்து சொல்லியவை. அவை வெறும் வார்த்தைகள் அல்ல! தங்களுடைய வாழ்க்கை அனுபவங்கள் நமக்கு சிறந்ததொரு வழிகாட்டியாக விளங்க வேண்டும் என்பதற்காகவே பெரியவர்கள் அவற்றை நமக்கு அவ்வப்போது அறிவுறுத்தியும் வலியுறுத்தியும் வந்திருக்கிறார்கள். கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமா? என்கிறார்களே... எதற்கு? காலை நேரச் சூரியனிலிருந்து வெளிவருகிற ஒளிக்கதிர்களில் கண்ணுக்குத் தேவையான வைட்டமின்கள் நிறைந்திருக்கின்றன. ஆகவே, தினமும் சூரியநமஸ்காரம் செய்துவந்தால் சூரிய ஒளிக்கற்றைகள் கண்களில் பட்டு பார்வையில் இருக்கிற சிறுசிறு குறைபாடுகளும் நீங்கி, கண் சீராக இருக்கும். அன்றி, பார்வைக் குறைபாடு ஏற்பட்ட பிறகு சூரியநமஸ்காரம் செய்வது எந்தவிதத்திலும் கண்ணுக்குப் பலன் அளிக்காது என்பதே அதன் பொருள்.
Be the first to rate this book.