இந்த நவீன உலகில் வாழும் மக்களுக்கு எதையும் விரித்துச் சொன்னால் பிடிப்பதில்லை; பிடிப்பதில்லை என்பதைவிட விரிவான விஷயத்தை, செய்தியை படிக்கவோ கேட்கவோ அவர்களுக்கு நேரமில்லை என்பதே உண்மை. ஆகவே, சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்கிற நடைமுறையை ஊடகங்களும் ஏற்றுக்கொண்டுவிட்டன. அதன்படியே, இன்றைக்கு அச்சு ஊடகங்களும் காட்சி ஊடகங்களும் நன்றாகவே அதை அமல்படுத்தவும் செய்கின்றன. அதை உள்வாங்கிக் கொண்டுதான் விகடன் குழுமத்திலிருந்து முன்பு வெளிவந்துகொண்டிருந்த ஜூனியர் போஸ்ட் இதழில், சுஜாதாட்ஸ் என்ற தொடர் வெளிவந்தது.
அன்றைய காலகட்டத்தில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளையும் சம்பவங்களையும் தன் சிந்தனை ஓட்டத்தில் இருந்து எழுத்தாளர் சுஜாதா எழுதிவந்தார். அப்போது, ஜூனியர் போஸ்ட் வாசகர்கள் மத்தியில், அது மிகுந்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. இலக்கியம், அரசியல், சினிமா, ஊடகம் என்று பல்வேறு துறைகளையும் சுஜாதா அந்தக் கட்டுரைகளில் அலசியிருக்கிறார். முன்பு சொன்ன மாதிரி சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்கிற முறையே அந்தக் கட்டுரைகளின் சிறப்பு.
Be the first to rate this book.