சுஜாதாவின் நாடகங்களின் முழுத் தொகுப்பு இது. அவரது புகழ் பெற்ற நாடகங்களான அன்புள்ள அப்பா, டாக்டர் நரேந்திரனின் வினோத வழக்கு, ஊஞ்சல், பாரதி இருந்த வீடு, அடிமைகள் உள்ளிட்ட 22 நாடகங்கள் இத்தொகுப்பில் இடம்பெறுகின்றன. வாசிக்கப்பட்டபோதும் நிகழ்த்தப்பட்டபோதும் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன் ஆழ்ந்த மனக்கிளர்ச்சியை இந்த நாடகங்கள் ஏற்படுத்தின. உரையாடல்களின் கூர்மையும் கதாபாத்திரங்களிடையே நிகழும் தீவிர மாறுதல்களும் உறவுகளின் விசித்திரங்களும் இந்த நாடகங்களை நவீன வாழ்க்கை முறையின் துல்லியமான சித்திரங்களாக்குகின்றன.
Be the first to rate this book.