சுகந்தியின் ஆரம்பகாலக் கவிதைகள் பெரும்பாலும் மிகநேர்மையா உணர்ச்சிவேகம் கொண்டவை. தன்னியல்பான மொழிவீச்சுக் கொண்டவை. நான் திருப்பத்தூரில் இருந்தது வரை அவர் எழுதியதை நான் வாசித்திருக்கிறேன்.அவற்றைக் கொண்டு அவரது உளச்சிக்கலைக்கூட ஊகிக்க முடியும் என்று தோன்றவில்லை. ஆனால் சட்டென்று ஒரு கவிதை அவற்றில் தோன்றிவிடும் என்பார் சுப்ரபாரதி மணியன். அவ்வாறு தோன்றிய கவிதைகளையே அவர் நூல்வடிவமாக ஆக்கியிருக்கிறார்.
“சாவது ஒரு கலை - சில்வியா ப்ளாத்
சாகமுடியாததும் ஒரு கலை - சுகந்தி”
சுகந்தியின் கவிதைகளில் துயருற்று நலிந்த ஓர் ஆத்மாவின் வாதைகள் எளிமையாக பதிவாகியிருக்கும். அக்காரணத்தால்தான் அவர் இன்னும் தமிழில் நினைவுகூரப்படுகிறார்.
Be the first to rate this book.