சூஃபித்துவம் பற்றிய நூல்கள் ஒன்பது, பத்தாம் நூற்றாண்டுகளிலேயே எழுதப்பட்டுவிட்டன. அவற்றில் ஒரு முக்கியமான நூல்தான் அல் குஷைரியின் ‘ரிஸாலத்துல் குஷைரிய்யா’ என்று அறியப்படும் நூல். அதை ஆங்கிலம் வழி தமிழ்ப்படுத்தியிருக்கிறார் பேராசிரியர் தௌஃபீக் ரமீஸ். கொஞ்சம் வியப்பாகவும் , பெருமையாகவும் இருக்கிறது. அவர் செய்திருப்பது மகத்தான பணி. ஏனெனில் சூஃபித்துவம் பற்றி அறிந்து கொள்ள ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய பாலபாடம் போன்ற நூல் இது. சூஃபி மனநிலையை உருவாக்கத் தேவையான மனப் பண்புகளை விளக்கியும், விளக்கவும் பல கதைகளும், நபிமொழிகளும், வரலாற்று நிகழ்வுகளும். திருமறையிலிருந்து மேற்கோள்களும், அதில் சொல்லப்பட்டிருக்கின்றன என்பதைவிட கொட்டப்பட்டிருக்கின்றன என்றே சொல்ல வேண்டும்.
- நாகூர் ரூமி
5
Anwar riyas 27-09-2018 12:49 pm