அபு யாசித் அல் பிஸ்தமி தொழுவதற்காக பள்ளி வாசலுக்குச் சென்றபோது, வழக்கம்போல தன் ஊன்றுகோலை பள்ளிவாசல் சுவரில் சாய்த்து வைத்தார்.
அது நழுவி தரையில் விழுந்தது. அபு யாசித்தின் பக்கத்தில் ஒரு முதியவர் தொழுகைக்காக அமர்ந்திருந்தார். அவரும் தன் ஊன்றுகோலை அங்குதான் சாய்த்து வைத்திருந்தார். அபு யாசித்தின் ஊன்றுகோல் நழுவி முதியவருடையதும் தரையில் விழுந்தது. தொழுகைக்குப் பிறகு முதியவர் சிரமப்பட்டுக் குனிந்து தன் ஊன்றுகோலை எதுத்துக்கொண்டு நடந்து சென்றார்.
முதியவரிடம் அபு யாசித் சொன்னார்;
“என் ஊன்றுகோலை நான் கவனமில்லாமல் வைத்ததால்தான் உங்கள் ஊன்றுகோலும் விழுந்தது; அதை நீங்கள் கஷ்டப்பட்டு குனிந்து எடுக்க நேர்ந்தது. உங்களுக்குத் தொல்லை கொடுத்ததற்காக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.”
அந்த முதியவர் அபு யாசித்தை அணைத்துக் கொண்டார்......
சுற்றுமுள்ள ஒவ்வொன்றையும் நேசிக்கும் மனவிசாலம்..
முடிவற்றதின் ஒருமையில் மனித்த்தையும் இயற்கையையும் ஒன்றேயாக அறியும் ஞானம்.....
சூபி கதைகள்!
Be the first to rate this book.