'சூஃபி' என்கிற சொல் எப்படி வந்தது? 'ஸஃபா' என்கிற அரபிச் சொல்லே அதன் வேர்ச்சொல் என்கிறது சமயக் கலைக்களஞ்சியம். 'ஸஃபா'என்பதன் பொருள் பக்தி, தூய்மை .சூஃபிகள் எப்படிப்பட்டவர்கள்? இனிமையான பேச்சு, விரும்பத்தக்க நற்பண்புகள், எளிமையான வாழ்க்கை முறை கொண்டவர்கள். அவர்கள் பிற மத உணர்வுகளை மதிக்கும் மனப்பக்குவம் கொண்டிருந்ததும் சமூக நல்லுறவை வளர்த்ததும் குறிப்பிடத்தக்கவை. அன்பை அடிப்படையாகக் கொண்ட சூஃபித்துவம் அரபு நாடுகளில் சிறப்பான வளர்ச்சி (கிபி 700 --1500)யைக் கண்டது. ஆப்பிரிக்கா,எகிப்து, இந்தியா (சில பகுதிகள்) போன்ற நாடுகளிலும் வேர்பிடித்து விருத்தி அடைந்தது. சூபித்துவம் என்பது வாழ்தலுக்கான செயல்முறை! சூஃபி ஞானம் என்கிற இந்நூல் ஞானத்தைப் பற்றி, ஞான வழியில் செல்லும் செயல்முறை பற்றி, ஞானிகள் பற்றி பேசுகிறது. இந்நூலைப் படிக்கும் போதே வாழ்வின் இன்னொரு பக்கத்தைப் பார்க்கிற உணர்வு உங்களுக்குள் தோன்றும் . புதிய வெளிச்சம், புதிய காற்று உள்ளே பரவும் . ஒர் உன்னத அனுபவத்தை உங்களுக்கு வழங்க முடிந்ததில் எங்களுக்குப் பெருமிதம். நிம்மதியும், மகிழ்ச்சியும் உங்கள் வாழ்வில் நிலைக்கட்டும்.
Be the first to rate this book.