மகிழ்ச்சி! மகிழ்ச்சி! எனக்கு வெற்றி! இப்போது நான் என்பது நான் என்று எனக்குத் தெரியாது. என்னுள்ளே அன்பால் எரிகிறேன் அன்பில் என்னைப் புதைத்துக் கொள்கிறேன், என்று பாடுகிறார் சூஃபி ஞானி அத்தார் பன்னிரெண்டாம் நூற்றாண்டில். என்னை நான் எப்போது அறிந்துகொள்ளமுடியும்? அன்பால் என்னையே எரித்துக் கொள்ளும்போதுதான் அது நிகழும். என்னை மறுத்து என்னை எரி தழலில் எரித்து நான் ஒன்றுமில்லாமல் ஆகும்போது என் காதலியாம் இறைவனைக் காண்பேன். ஆனால் எத்தனை தடைகள்? எத்தனை துன்பங்கள்? முழுமையின் பள்ளத்தாக்கை அடைய, பரவச நிலையை எட்ட என்ன செய்யவேண்டும்? அந்த ஆன்மீகப் பயணத்தை மேற்கொள்ளும் வழியைக் காட்டுகிறார் அத்தார். இனிய பயணம்.
Be the first to rate this book.