வானியல் ஆராய்ச்சியில் சுப்ரமணியன் சந்திரசேகரின் கண்டுபிடிப்புக்கு விஞ்ஞான உலகம் வைத்திருக்கும் பெயர் "சந்திரசேகர் வரம்பு". இவர் வானியல் ஆராய்ச்சிகள் செய்து வெளியிட்ட, விண்மீன் தோற்றத்தின் இறுதி நிலைக் கோட்பாடு வானியல் துறையில் நிச்சயம் ஒரு மைல்கல். அதனாலேயே நோபல் பரிசு இவரை அலங்கரித்தது. இங்கிலாந்திலும் அமெரிக்காவிலுமாக ஐம்பத்து மூன்று வருடங்கள் அயல்நாட்டில் வசித்த சந்திரசேகர் , தனது ஆராய்ச்சிகளுக்கு நடுவே, மிகச் சிறந்த பல்கலைக்கழகங்களில் பேராசிரியராகப் பணியாற்றியவர்.
பலன் கருதாத கடின உழைப்புக்கும், அர்ப்பணிப்புக்கும் உதாரண புருஷர். உலகின் இருபது பல்கலைக்கழகங்களின் கௌரவ டாக்டர் பட்டங்கள் தொடங்கி, இந்தியாவின் பத்ம விபூஷன் விருதுவரை பெற்ற ஒரு மாபெரும் விஞ்ஞானியின் மலைப்பூட்டும் வாழ்க்கை வரலாறு.
Be the first to rate this book.