சுந்தர ராமசாமியின் மறைவிற்குப் பின்பு தனது வாழ்க்கையில் எதிர்கொண்ட அனுபவங்களை கமலா ராமசாமி நினைவுகூரும், பகிர்ந்துகொள்ளும் பதிவேடு இந்த நூல்.
மாபெரும் இலக்கிய ஆசிரியரும் தனித்துவம் வாய்ந்த ஆளுமையுமான சு.ரா.வின் தோழமையில் வாழ்ந்த நாள்களை மகிழ்வுடனும் அவர் இல்லாத தனிமைக் காலத்தைத் தவிப்புடனும் முன்னகர்த்திய கமலா தனக்கான புதிய திசைகளைக் கண்டடைகிறார். புதிய நட்புகள், புதிய பயணங்கள், எழுத்து, வாசிப்பு, தன்னைத் திரட்டி எடுத்துக்கொள்ளும் முனைப்பில் மேற்கொள்ளும் மகிழ்ச்சிகரமான செயல்பாடுகள் மூலம் புதுமனுஷியாக மாறுகிறார்.
ஒரு பெண் தனது கனிந்த பருவத்தில் தன்னுடைய சுயத்தைக் கண்டடைகிறார். ஆலமரத்து நிழலில் தழைத்து வளர்ந்த செடியும் தனித்துவமான உயிர் என்று இந்த அனுபவத்திரட்டில் கமலா ராமசாமி எடுத்துக்காட்டுகிறார்.
Be the first to rate this book.