இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்டீவ் ஜாப்ஸுடன் மேற்கொள்ளப்பட்ட நேர்காணல்கள், அத்துடன் அவருடைய குடும்பத்தினர், நண்பர்கள், எதிரிகள், போட்டியாளர்கள் சக ஊழியர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்களுடன் நடத்திய உரையாடல்களையும் அடிப்படையாகக் கொண்டு உருவானது இந்தப் புத்தகம். இது பன்னாட்டளவில் பாராட்டப்பட்ட கண்டுபிடிப்பு தன்மையுள்ள ஓர் இறுதிச் சின்னத்தின் வாழ்க்கை வரலாறு. கச்சிதத்தின் மீதான ஆர்வம், ஆவேசம் மிக்க ஆற்றல் ஆகியவற்றால் ஸ்டீவ் ஜாப்ஸ் கணினிகள்,அனிமேசன் திரைப்படங்கள், இசை, கைபேசிகள், டாப்லெட் கணினிப் பயன்பாடு, டிஜிட்டல் பதிப்பு என ஆறு வெவ்வேறு தொழில்துறைகளில் பெறும் புரட்சியை உருவாக்கியவர். வால்டர் ஐசாக்ஸன் இன்னூலில் விறுவிறுப்பூட்டும் நடையில் ஆக்க காலத்திறன் மிக்க ஒரு தொழில்முனைவரின் தீவிரம் பொதிந்த ஆளுமையையும் ஏற்ற இறக்கங்கள் மிகுந்த வாழ்க்கையின் கதையையும் விவரிக்கிறார்.
Be the first to rate this book.