மனித உடல், 200க்கும் மேற்பட்ட செல்களால் வடிவமைக்கப்பட்டது. இவை அனைத்தும் முதன்மைச் செல்களிலிருந்து உற்பத்தியாகின்றன. இந்த முதன்மைச் செல்களே ஸ்டெம் செல் எனும் குருத்தணு.
ஸ்டெம் செல் தொப்புள் கொடியினுள் இருப்பது. இது தசை, நரம்பு, ரத்தம் போன்ற பல்வேறு விதமான செல்களுக்கும் முதன்மையான செல். இது, ஒரு செல்லிலிருந்து மற்றொரு வகை செல்களை உற்பத்தி செய்யும் திறனும், ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகரும் இயல்பும் கொண்டது.
தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்ளவும், புது அணுக்களைப் படைக்கவும் வல்லது. இந்த ஸ்டெம் செல், மனித உடம்பிலுள்ள அனைத்து நோய்களுக்கும் சிறந்த மருந்து. இத்தனை சிறப்பு வாய்ந்த ஸ்டெம் செல் பற்றி, அதன் வகைகள் பற்றி, அது சேமிக்கப்படும் வங்கிகள் பற்றி, அதன் சிகிச்சை முறை பற்றி, ஆராய்ச்சிகள் பற்றி தெளிவாக எடுத்துச் சொல்கிறது புத்தகம்.
முத்தாய்ப்பாக, புத்தகத்தின் இறுதியில் ஸ்டெம் செல் தொடர்பான, 80 மருத்துவம் சார்ந்த ஆங்கில வார்த்தைகளுக்கு இணையான தமிழ் கலைச் சொற்கள் பகுதியை இணைத்திருப்பது, தனி கவனத்தைப் பெறுகிறது.
ஸ்டெம் செல் பற்றி முழுமையாகப் பேசும் இந்தப் புத்தகம், படிப்பவர் மருத்துவ அறிவை அகலப்படுத்தும் தன்மையுடனேயே இருக்கிறது என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.
Be the first to rate this book.